IND Vs SA Final: டி20 உலகக்கோப்பையில் இந்தியா வெற்றிபெற வேண்டி ரசிகர்கள் சிறப்பு வழிபாடு.!

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிக்கொள்ளும் ஐசிசி டி20 ஆடவர் உலகக்கோப்பை போட்டியில், இந்தியா வெற்றிபெற வேண்டும் என இந்தியாவே பிரார்த்தனை செய்து வருகிறது.

IND Vs SA Final: டி20 உலகக்கோப்பையில் இந்தியா வெற்றிபெற வேண்டி ரசிகர்கள் சிறப்பு வழிபாடு.!
Team India Fans Prayer in Prayagraj (Photo Credit: @ANI X)

ஜூன் 29, பார்படோஸ் (Sports News): அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக்கோப்பை (ICC T20 World Cup 2024) போட்டியில், இறுதிப் போட்டி இன்று இரவு 8 மணி அளவில் கனிங்ஸ்டன் ஓவல் பார்போடோஸ் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் இறுதிப்போட்டிற்கு தகுதி பெற்றுள்ள இந்தியா - தென்னாபிரிக்கா (IND Vs SA Final ICC T20 Wold) அணிகள் மோதுகின்றன. ஆட்டத்தில் வெற்றி பெற இந்தியாவுக்கு பெருமளவு வாய்ப்பு உள்ளது என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. இன்று இரவு 8 மணியளவில் இந்திய நேரப்படி தொடங்கும் ஆட்டத்தில், இந்தியா வெற்றி பெற வேண்டுமான இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். எய்டன் மார்க்கம் தலைமையிலான தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியும் - ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் மோதிக்கொள்ளும் ஆட்டம் பரபரப்பு மிகுந்த ஆட்டங்களுக்கு பஞ்சம் இல்லாமல் அமையும். Fire Crackers Factory Explodes: பட்டாசு ஆலையில் திடீர் வெடிவிபத்து; 4 பேர் பலி., விருதுநகரில் சோகம்.! 

2024 டி20 உலகக்கோப்பை தொடரில் சிறந்து விளங்கிய இந்திய அணி, இறுதிப்போட்டியிலும் வெற்றிவாய்ப்பை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் இதனை எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். மேலும், இன்று காலை முதலாகவே பல ஊர்களிலும் உள்ள கோவில்கள் மற்றும் பொதுவெளிகளில் இந்தியா வெற்றி பெற வேண்டி தங்களின் நம்பிக்கையான கூட்டுப் பிரார்த்தனையும் செய்து வருகின்றனர். அந்த வகையில், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் மாவட்டத்தில், கிரிக்கெட் ரசிகர்கள் சார்பில் சிறப்பு பூஜை ஆனது இந்தியா வெற்றி பெற வேண்டும் என நடத்தப்பட்டது. இன்று நடக்கும் ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வீட்டில் இருந்தபடி நண்பர்களுடன் கண்டுகளிக்கலாம்.

(The above story first appeared on LatestLY on Jun 29, 2024 11:50 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).