Fire Crackers Factory Explodes: பட்டாசு ஆலையில் திடீர் வெடிவிபத்து; 4 பேர் பலி., விருதுநகரில் சோகம்.!
சாத்தூர் அருகேயுள்ள பட்டாசு ஆலை வெடித்து ஏற்பட்ட விபத்தில், நால்வர் பரிதாபமாக உயிரிழந்தனர். மீட்பு பணிகள் தொடருகின்றன.
ஜூன் 29, சாத்தூர் (Virudhunagar News): விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர், பந்துவார்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான (Firework Factory Explodes) பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் உள்ளூரை சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதனிடையே, இன்று ஊழியர்கள் வழக்கம்போல தங்களின் பணிகளை கவனித்துக்கொண்டு இருந்தனர். MS Dhoni New Look: "அந்த ஆகாயம் போதாத பறவை ஒன்று.." புதிய ஹேர்ஸ்டைலில் ரசிகர்கள் மனதை கவர்ந்த தல தோனி..!
3 அறைகள் வெடித்து சிதறியது:
அச்சமயம், திடீரென பட்டாசு ஆலையில் வெடிவிபத்து எபிரெட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஆலையின் 3 அறைகளானது தரைமட்டமாகி சேதமடைந்த நிலையில், அங்கு பணியாற்றி வந்த ஊழியர்கள் 4 பேர் பலியானதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், இடிபாடுகளை அகற்றி பலியானோரின் உடலை மீட்டு வருகின்றனர். Pakistan Heat Wave Death: பாகிஸ்தானில் கடும் வெப்பம்; சுமார் 450-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு.. சுகாதார அமைப்பு எச்சரிக்கை..!
அதிகாரிகள் விசாரணை:
மேற்படி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த விஷயம் குறித்து காவல் துறையினரும் தங்களின் விசாரணையை தொடங்கி இருக்கின்றன. அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையின்படி, வெடிமருந்து கலவை அறையில் முதலில் வெடிவிபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
(The above story first appeared on LatestLY on Jun 29, 2024 09:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

