Cop Son Affect Spinal Muscular Atrophy (Photo Credit: @ANIHindiNewx X)

மார்ச் 04, ஜெய்பூர் (Rajasthan News): இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூர், ஹ்ரிடயன்ஸ் பகுதியை சேர்ந்தவர் நரேஷ் சர்மா. இவர் அம்மாநில காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். அங்குள்ள தோல்பூர் காவல் நிலையத்தில் வேலை பார்க்கிறார்.

தசைசிதைவு பிரச்சனை: தனது மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த காவல் உதவி ஆய்வாளர்களுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது. தற்போது 21 மாதமாகும் குழந்தைக்கு, முதுகெலும்பு தசைச் சிதைவு (Spinal Muscular Atrophy SMA) பிரச்சனை இருந்துள்ளது. PM Modi Schedule: 12 மாநிலங்கள், 10 நாட்கள்.. அனல்பறக்கும் அரசியல்களத்தில், பம்பரமாய் சுழலும் பிரதமர்.. விபரம் இதோ.! 

நிதிதிரட்டும் காவலர்கள்: இதற்கு சிறுவனுக்கு ஜோல்ஜென்ஸ்மா ஊசி (Zolgensma Injection) செலுத்தப்பட வேண்டும் என்ற நிலை இருந்துள்ளது. இந்த தடுப்பூசியின் விலை ரூ.17.5 கோடி ஆகும். இந்த விஷயம் சக காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரியவரவே, காவல் துறையினர் சேர்ந்து நிதியை திரட்டும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதுகெலும்பு தசைச்சிதைவு நோய்: மரபியல் ரீதியாக ஏற்படும் இந்நோய், நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்யும் பெற்றோரின் வாயிலாக குழந்தைக்கு ஏற்படுகிறது. எலும்புத்தசை பலவீனமடைதல், தசைப் புரத குறைபாடு போன்றவை இவற்றின் வாயிலாக நடந்து உடல்நலம் மோசமாகும். இந்நோய்க்கு உரிய தடுப்பு மருந்து இல்லை எனினும், நோயின் தாக்கத்தை குறைக்க மேற்கூறிய ஜோல்ஜென்ஸ்மா பயன்படுத்தப்படுகிறது.