AUS Vs IND 4th Test Day 1 (Photo Credit: @Dubeyjilive X)

டிசம்பர் 26, மெல்போர்ன் (Sports News): ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், 3 டெஸ்ட் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலியா - இந்தியா (AUS Vs IND 4th Test, Day 1) அணிகள் மோதும் 4வது டெஸ்ட் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (Melbourne) இன்று (டிசம்பர் 26) முதல் பாக்சிங் டே போட்டியாக அதிகாலை 5 மணிக்கு தொடங்கியது.

முதல் நாள் ஆட்டம் முடிவு:

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களான சாம் கோன்ஸ்டாஸ் (Sam Konstas) மற்றும் உஸ்மான் கவாஜா இருவரும் அபாரமாக விளையாடி அரைசதம் விளாசினர். சாம் கோன்ஸ்டாஸ் 60 ரன்னிலும், கவாஜா (Usman Khawaja) 57 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து வந்த மார்னஸ் லபுஷேன் (Marnus Labuschagne) 72 ரன்கள் அடித்து அவுட்டானார். மறுபுறம் ஹெட் 0, மிட்செல் மார்ஸ் 4, கேரி 31 ரன்னில் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். இறுதியில் ஆஸ்திரேலியா அணி 86 ஓவர்கள் விளையாடி 6 விக்கெட்களை இழந்து 311 ரன்கள் குவித்தது. இதன்மூலம் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஆஸ்திரேலியா அணியில் ஸ்மித் (Steven Smith) 68 ரன்கள், பேட் கம்மின்ஸ் 8 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்தியா சார்பில் பும்ரா 3, ஆகாஷ் தீப், ஜடேஜா, சுந்தர் தலா 1 விக்கெட்களை வீழ்த்தி உள்ளனர். PV Sindhu Wedding: பி.வி. சிந்து – வெங்கட தத்தா சாய் திருமணம்.. வைரலாகும் புகைப்படங்கள்.!

விராட் கோலிக்கு அபராதம் விதிப்பு:

இதற்கிடையே போட்டியில், சாம் கோன்ஸ்டாஸ் விளையாடிய போது, அவருடன் விராட் கோலி நேரடி ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டார். அதாவது ஓவர்களுக்கு இடையில் பந்தை கையில் எடுத்து மறுமுனைக்கு நகர்ந்த விராட் கோலி, சாம் கோன்ஸ்டாஸின் தோளில் வேண்டுமென்றே இடித்து சென்றார். அப்போது சாம் கோன்ஸ்டாஸ் டென்ஷனில் விராட் கோலியை நோக்கி பேச, கோலி பதிலுக்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் நடுவர்கள் வந்து சமாதானம் செய்து இருவரையும் அனுப்பினர். இதனால் 19 வயதாகும் அறிமுக வீரரை விராட் கோலி இப்படி செய்யலாமா என ஆஸ்திரேலியா வர்ணனையாளர்கள் கேள்வி எழுப்ப தொடங்கினர். தொடர்ந்து விராட் கோலியின் இந்த நடத்தைக்காக. அவரது போட்டி கட்டணத்தில் 20% அபராதம் மற்றும் ஒரு புள்ளி மைனஸும் செய்யப்பட்டது.