ஜனவரி 31, திரிபுரா (Tripura): இந்திய கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால் (Mayank Agarwal), தற்போது உள்ளூர் தொடரான ரஞ்சிக் கோப்பையில் கர்நாடக அணிக்குக் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் இவர் ரஞ்சி போட்டியில் விளையாடுவதற்காக, திரிபுராவின் அகர்தலாவுக்கு விமானத்தில் சென்றுள்ளார். அப்போது விமானத்திலேயே திடீரென வாந்தி எடுத்துள்ளார். Controlling Mosquitoes at Home: வீட்டில் கொசுத்தொல்லை அதிகமா இருக்கா..? விரட்டி அடிக்க இதை பண்ணுங்க… இனி கொசுவே வராது..!
இதையடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அகர்தலாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தொண்டையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் அபாயகட்டத்தை தாண்டிவிட்டதாக சொல்லப்படுகிறது.