Mosquitoes (Photo Credit: Pixabay)

ஜனவரி 31, சென்னை (Chennai): தற்போது எல்லோர் வீட்டிலும் இருப்பது ஒரே ஒரு பிரச்சனை தான். அது கொசுக்கள் (Mosquitoes) தான். நிம்மதியாக தூங்கவிடாமல் காதுக்குள் கத்திக் கொண்டும், நம்மை கடித்தும் படாத பாடுபடுத்துகிறது. இவை கடித்த இடத்தினை சொரிவதினால் நமக்கு புண்கள் தான் அதிகமாகிறது. இப்படிப்பட்ட கொசு தொல்லையில் இருந்து விடுபடுவதற்கான வழிகளை தற்போது பார்ப்போம்.

கொசுக்களை விரட்டுவதற்கான வழிகள்: ஒவ்வொருவரும் வீட்டின் உட்புறம் தூய்மையாக இருப்பதோடு மட்டுமல்லாமல், வெளிப்புறத்திலும் தூய்மையாக வைத்திருப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். எனவே வீட்டின் அருகே தண்ணீரை தேங்க விடக் கூடாது. BAPS Hindu Mandir in Abu Dhabi New Pictures: அபுதாபியில் பிரம்மாண்ட இந்து கோயில்... பிரதமர் மோடி திறப்பு..!

கொசுக்களை வீட்டிற்குள் வரவிடாமல் தடுப்பதற்கு மாலை நேரங்களில், சூரிய ஒளி மறைவதற்கு முன்பு வீட்டில் ஜன்னல், மற்றும் கதவுகளை மூடிவிட வேண்டும். மணங்களினால் கொசுக்கள் விரட்டம் என்பது உண்மை. அதனால், தான் சிலர் வீட்டில் மெழுகுவர்த்தி அல்லது வாசனை எண்ணெய்களைக் கொண்டு விளக்கு ஏற்றி வைப்பர். இவ்வாறு இருக்கும்பட்சத்தில், வீட்டில் நறுமணப் பொருள்கள் வீசுவதால் கொசுக்கள் விரட்டி அடிக்கப்படும்.

வீட்டில் ஆங்காங்கே ஒரு சிறிய தட்டில் எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அதில் கிராம்புகளைக் குத்தி வைக்க வேண்டும். இவ்வாறு வைப்பதன் மூலம், கொசுக்கள் வருவது குறைய ஆரம்பிக்கும். மேலும் கற்பூரவல்லி மற்றும் கற்றாழைச் சாற்றை தண்ணீருடன் சேர்த்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீட்டில் ஸ்ப்ரே செய்து கொசுவை விரட்டலாம்.