ஜூன் 03, டல்லஸ் (Cricket News): ஐசிசி ஆண்கள் T20 உலகக் கோப்பை (2024 T20 WORLD CUP 2024) அமெரிக்காவில் கோலாகலமான கொண்டாட்டத்துடன் தொடங்கி இருக்கிறது. இதில் பங்கேற்கும் ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு நந்தினி தான் ஸ்பான்சர் (Dairy Nandini). Massive Jump In Stock Market: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு.. உச்சம் சென்ற பங்குச்சந்தை..!
நந்தினி பால் பொருட்கள் விற்பனை பிராண்டை பொறுத்தவரை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை தாண்டி, துபாயில் கடைகளை திறந்துள்ளது. அடுத்தகட்டமாக ஷார்ஜா, அபுதாபி ஆகிய இரண்டு நகரங்களில் கடைகளை திறக்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே கத்தாரில் நடைபெற்ற 2022 உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினா அணிக்கு குஜராத் மாநிலத்தின் பால் பொருட்கள் விற்பனை பிராண்டான அமுல் ஸ்பான்சர் செய்தது கவனிக்கத்தக்கது.