Sensex (Photo Credit: Pixabay)

ஜூன் 03, புதுடெல்லி (New Delhi): 18 வது இந்திய மக்களவைத் தேர்தல் 2024 (General Elections India 2024) ஏழுகட்டமாக இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டது. தேர்தல் முடிவுகள் அனைத்தும் இன்னும் நாளை ஒரேகட்டமாக (2024 Elections Results) வெளியாகிறது. மத்தியில் ஆட்சிக்கட்டிலில் அமரபோகும் அணியை எதிர்பார்த்து இந்திய மக்கள் மட்டுமல்லாது உலகளாவிய தலைவர்களும் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி இந்தியாவில் மீண்டும் பாஜக தலைமையிலான ஆட்சி அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. Kadhalikka Neramillai Glimpse Out: "என்னை இழு இழு இழுவென இழுக்குதடி.." ஜெயம் ரவியின் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு..!

இதனைத் தொடர்ந்து, இந்தியப் பங்குச்சந்தையில் பியூச்சர்ஸ் சந்தையில் இருந்து வெளியேறிய அன்னிய முதலீடுகள் மீண்டும் வந்தது. இதன் எதிரொலியாகவே ஃப்ரி மார்க்கெட் வர்த்தகத்தில் சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. மேலும் நிப்டி ஐடி குறியீடு 191 புள்ளிகள் உயர்ந்து 32,576.65 புள்ளிகளாக உள்ளது. இதனால் சந்தை தொடங்கும் போது நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிஃப்டி ஏற்றத்துடன் வர்த்தகமாகியது. மேலும் பவர் கிரிட், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், அதானி போர்ட்ஸ், அதானி எண்டர்பிரைசஸ், மற்றும் என்டிபிசி ஆகியவை கணிசமான லாபத்துடன் சந்தையில் முன்னணியில் உள்ளன.