Keshav Maharaj Opens Up: ராம் சியா ராம் பாடலின் பின்னணி ரகசியம்.. தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் பரபரப்பு பேட்டி..!

இந்தியாவிற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியின் போது ராம் சியா ராம் பாடலை டிஜே பிளே பண்ண என்ன காரணம் என்பதனை தென் ஆப்பிரிக்கா வீரர் கேசவ் மகாராஜ் வெளிப்படையாக பேசியுள்ளார்

Keshav Maharaj Opens Up: ராம் சியா ராம் பாடலின் பின்னணி ரகசியம்.. தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் பரபரப்பு பேட்டி..!
Keshav Maharaj (Photo Credit: @PTI_News X)

ஜனவரி 09, புதுடெல்லி (New Delhi): இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடந்தது. அப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. ஆனால் அந்தப் போட்டியில் அனைவரும் கவனிக்க கூடிய ஒரு விஷயம் நடந்தது. அது என்னவென்றால் கேசவ் மகாராஜ் மைதானத்திற்குள் வரும் போது ராம் சியா ராம் என்ற பாடலை டிஜே பிளே செய்தார். அதற்கு விராட் கோலி ஆடிய வீடியோ கூட அப்போது மிகவும் வைரலானது. இந்நிலையில் தற்போது ராம் சியா ராம் பாடலை டிஜே பிளே பண்ண என்ன காரணம் என்பதனை தென் ஆப்பிரிக்கா வீரர் கேசவ் மகாராஜ் (Keshav Maharaj) கூறியுள்ளார். NEET PG Exam: முதுநிலை நீட் தேர்வு... எப்போது நடைபெற உள்ளது?.. வெளியான அறிவிப்பு..!

இது குறித்து அவர் பேசியிருப்பதாவது, "நான்தான் முன் வந்து அந்தப் பாடலை ப்ளே செய்யுமாறு கூறியிருந்தேன். என்னை பொருத்தவரை கடவுள் தான் என்னை ஆசீர்வதிக்கிறார். அவர்தான் என்னை பாதுகாக்கிறார். எனக்கு வாய்ப்புகளை அளிக்கிறார். நான் செய்வதெல்லாம் மிக மிகக் குறைவு. பின்னணியில் 'ராம் சியா ராம்' இசைப்பதைக் கேட்டுக்கொண்டு நடப்பதெல்லாம் ஒரு அருமையான உணர்வு" என்று பேசியுள்ளார்.

(The above story first appeared on LatestLY on Jan 09, 2024 06:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).