MS Dhoni's Social Media Post: புதிய சீசன்.. புதிய ரோல்.. வைரலாகும் எம்.எஸ்.தோனி பதிவு..!
ஐபிஎல் தொடரை முன்னிட்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, பேஸ்புக்கில் திடீர் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
மார்ச் 05, மும்பை (Cricket News): 17ஆவது ஐபிஎல் சீசன் (IPL 2024) தொடங்குவதற்கு இன்னும் சில நாள்களே உள்ளன. இந்த ஐபிஎல் தொடரில் ஏற்கெனவே பல சுவாரஸ்யங்களை ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். முதல் போட்டியே சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இடையில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. Banana Halwa: நாவில் கரையும் வாழைப்பழ அல்வா.. இப்படி ஈசியா செஞ்சு பாருங்க..!
எம்.எஸ்.தோனி பதிவு: இந்நிலையில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி (MS Dhoni) தனது சமூக வலைதளம் மூலம் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், “புதிய சீசன், புதிய பொறுப்பு” என்ற வாசகத்தை வெளியிட்டுள்ளார். இதனால் இந்த ஆண்டு அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகி அடுத்த கேப்டனை அறிவித்துவிட்டு இந்த சீசன் முடிவில் ஓய்வை அறிவிப்பார் என்று பலரும் கணித்துள்ளனர். அதேநேரம் இது ஒரு விளம்பர யுக்தியாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தோனி இதுபோல் பலமுறை பல கருத்துக்களை கூறிவிட்டு கடைசியில் அது விளம்பரம் என்று கூறியிருக்கிறார்.
(The above story first appeared on LatestLY on Mar 05, 2024 04:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

