Banana Halwa (Photo Credit: YouTube)

மார்ச் 4, சென்னை (Chennai): நமது அன்றாட வாழ்க்கையில் நாம் சாப்பிடும் உணவுகளில் கண்டிப்பாக ஒரு முறையாவது இனிப்பை சுவைத்து விடாமல் அந்த நாள் முடிவதில்லை. இனிப்பு சாப்பிடுவதற்கு கடைகளில் தான் வாங்க வேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை. நாம் நம் வீட்டிலேயே இனிப்ப உணவுகள் செய்து சாப்பிடலாமா அந்த வகையில் இன்று செய்து பார்க்க இருப்பது தித்திக்கும் சுவையுடன் வாழைப்பழ அல்வா.

தேவையான பொருட்கள்:

வாழைப்பழம் - 3

சர்க்கரை - 4 ஸ்பூன்

நாட்டுச்சர்க்கரை - 6 ஸ்பூன்

நெய் - 4ஸ்பூன்

கார்ன்பிளவர் - 2ஸ்பூன்

செய்முறை:

முதலில் தேவையான பொருட்களை எடுத்துக்கொள்ளவும். பின் வாழைப்பழத்தை (Banana) நன்றாக மசித்துக் கொள்ளவும். பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து அதில் மசித்தவாழைப்பழம் நாட்டுச்சர்க்கரை, சர்க்கரை(சீனி) சேர்க்கவும். பின் அதில் 1 ஸ்பூன் நெய் விட்டு நன்கு கலந்து கைவிடாமல் கிளறிவிடவும். வாழைப்பழம், நெய், சர்க்கரை, நாட்டு சர்க்கரை எல்லாம் சேர்த்து வெந்து அல்வா பதம் வரும். Woman Stabs Husband: கிப்ட் கொடுக்காத கணவன்.. தூங்கும் போது கத்தியால் குத்திய மனைவி..!

அப்போது கார்ன் பிளவரை தண்ணீர் சேர்த்து கலந்துகொள்ளவும், பின் வாழைப்பழகலவையுடன் சேர்த்து நன்குகலந்துவிடவும். பின் 3 ஸ்பூன் நெய் சேர்த்து கைவிடாமல் கிளறி விடவும்.கார்ன்பிளவர் சேர்த்ததால் விரைவில் அல்வா பதம் வந்து நெய் தனியாக பிரியும். வாணலியிலும் ஒட்டாமல் உருண்டு பந்து போல்வரும். அப்போது கேஸை ஆப் பண்ணிவிடவும். அவ்வளவு தான் சுவையான வாழைப்பழ அல்வா ரெடி.