ஜனவரி 15, உத்தரப்பிரதேசம் (Uttar Pradesh): வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் உள்ள பிரம்மாண்டமான ராமர் கோயிலில் பிரதிஷ்டை விழா (Ram Mandir Pranpratishtha) நடைபெற உள்ளது. அதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க ஆளும் மாநில முதலமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர். பா.ஜ.க.வைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது, எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் சினிமா பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் தலைவர்கள் அழைப்பை நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. IndiGo Passengers Have Dinner On Apron: விமானம் புறப்படுவதில் தாமதம்... விமானம் அருகே அமர்ந்து உணவு சாப்பிடும் பயணிகள்..!
தோனிக்கு அழைப்பு: இந்நிலையில் ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் எம்.எஸ்.தோனிக்கு (Dhoni) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கோவில் அறக்கட்டளை சார்பில் நேரில் சென்று தோனியை அழைத்தனர். இதற்கு முன்னர் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்க்கு அழைப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.