IndiGo Passengers Have Dinner On Apron (Photo Credit: @baldwhiner X)

ஜனவரி 15, புதுடெல்லி (New Delhi): வட இந்திய மாநிலங்களில் கடுபனிமூட்டம் நிலவுகிறது. இதனால், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவது மற்றும் தரையிறக்குவதில் சிரமம் உள்ளது. எனவே விமானங்கள் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன. அதனைத் தொடர்ந்து, நேற்று டெல்லியில் (Delhi) இருந்து கோவாவுக்கு (Goa) புறப்பட இருந்த இண்டிகோ விமானமும் தாமதம் (IndiGo Flight Delay) ஆனது. Pineapple Curd Curry: உடலை குளிர்ச்சியாக வைக்க அன்னாசிப்பழ மோர்க்குழம்பு.. செய்வது எப்படி?.!

விமானியைத் தாக்கிய பயணி: கிட்டத்தட்ட 12 மணி நேரம் பயணிகள் காத்திருந்தனர். அப்போது விமான இயக்கம் குறித்து இண்டிகோ விமானத்தின் விமானி தாமதம் குறித்து விளக்கியபோது, பயணி ஒருவர், திடீரென நடந்துச் சென்று விமானியை தாக்கியிருப்பார். இந்த வீடியோவானது, சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் வேகமாக வைரலானது. தொடர்ந்து அந்த பயணி மன்னிப்பு கேட்டு வீடியோ பதிவிட்டிருந்தார்.

விமானம் அருகே அமர்ந்து உணவு சாப்பிடும் பயணிகள்: இந்நிலையில் தற்போது மற்றொரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. விமானம் தாமதமானதால் பயணிகள் மும்பை (Mumbai) விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு பசியில் பயணிகள் பயணிகள் விமானம் அருகேயே அமர்ந்து உணவு சாப்பிட்ட ஆரம்பித்துள்ளனர். இந்த வீடியோ தான், தற்போது இணையம் முழுதும் வைரலாகியுள்ளது.