Sourav Ganguly Protest: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை விவகாரம்.. சவுரவ் கங்குலி எதிர்ப்பு போராட்டம்..!

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை விவகாரத்தினை முன்னிட்டு நாளை போராட்டத்தில் ஈடுபடுவதாக சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார்.

Sourav Ganguly Protest: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை விவகாரம்.. சவுரவ் கங்குலி எதிர்ப்பு போராட்டம்..!
Sourav Ganguly (Photo Credit: @India_AllSports X)

ஆகஸ்ட் 20, புதுடெல்லி (New Delhi): மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வெளிநோயாளிகளாகவும், சுமார் 1,500 பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். இங்குள்ள மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவப் படிப்பு பயிலும் பெண் மருத்துவர் (வயது 28) கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி இரவு பணியில் இருந்தார். அதிகாலை 3 மணி அளவில் மருத்துவமனையில் உள்ள கருத்தரங்க கூடத்தில் அவர் தூங்க சென்றார். கடந்த 9-ம் தேதி கருத்தரங்கு அரங்கில் பிணமாக மீட்கப்பட்டார். இவரை பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கிறார்கள். பிரேத பரிசோதனையில், பெண்ணின் அந்தரங்க உறுப்புகள், முகம், உதடுகள், கழுத்து, வயிறு, விரல்கள் மற்றும் கணுக்கால் ஆகிய இடங்களில் காயங்கள் இருந்ததிருக்கின்றன.

மருத்துவர் கொலை: இந்த வழக்கில் (Doctor Rape And Murder) முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவர் சஞ்சய் ராய். கைது செய்யப்பட்ட இவர், விசாரிக்கப்பட்டு வருகிறார். சஞ்சய் ராயுக்கு 4 முறை திருமணம் நடந்துள்ளதாகவும் அவரின் மோசமான நடத்தை காரணமாக 3 மனைவிகள் விட்டு சென்றதகாகவும், நான்காவது மனைவி புற்றுநோயால் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. அவரது செல்போனை ஆய்வு செய்தபோது இயற்கைக்கு மாறான பாலியல் உறவு கொண்ட ஏராளமான வீடியோக்கள் இருந்தன. Bharat Bandh 2024: பாரத் பந்த்; நாளை நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம்.. முழு விவரம் இதோ..!

சவுரவ் கங்குலி எதிர்ப்பு: மருத்துவர் மரணத்துக்கு நீதி கோரி மேற்குவங்கம் முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியை புறக்கணித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை விவகாரத்தினை முன்னிட்டு நாளை போராட்டத்தில் ஈடுபடுவதாக முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார்.

(The above story first appeared on LatestLY on Aug 21, 2024 06:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).