ஆகஸ்ட் 20, டெல்லி (Delhi News): உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய SC/ST இடஒதுக்கீடு தீர்ப்பை எதிர்த்து, ரிசர்வேஷன் பாச்சாவ் சங்கர்ஷ் சமிதி நாடு தழுவிய அளவில் நாளை (ஆகஸ்ட் 21) பாரத் பந்த்திற்கு (Bharat Bandh) அழைப்பு விடுத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள SC/ST குழுக்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
சமீபத்தில் 'உண்மையில் இடஒதுக்கீடு தேவைப்படுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்' என்று உச்ச நீதிமன்றம் (Supreme Court) கூறியது. இந்த முடிவை பலர் SC/ST சமூகங்களின் நலன்களுக்கு அநியாயமானது மற்றும் தீங்கு விளைவிப்பதாகக் கருதுகின்றனர். இந்த முடிவை எதிர்த்து அதை திரும்பப் பெறக் கோரியே இந்த 'பாரத் பந்த்' அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனை ஆதரித்து பல்வேறு சமூக மற்றும் அரசியல் அமைப்புகள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. Biker Washed Away In Flood: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இருசக்கர வாகன ஓட்டி.. காப்பாற்றிய பொதுமக்கள்.. வைரலாகும் வீடியோ..!
இதனை முன்னிட்டு நாளைய தினம் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஆம்புலன்ஸ்கள் மற்றும் பிற அவசர மருத்துவ சேவைகள் பந்த் முழுவதும் செயல்படும். மேலும், மருத்துவமனைகள் மற்றும் தீயணைப்புத் துறைகள் உட்பட பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு முக்கியமான சேவைகள் தொடர்ந்து செயல்படும். பேருந்துகள் மற்றும் ரயில்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் குறைந்த அளவிலான இடையூறுகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல தனியார் அலுவலகங்கள் மற்றும் வணிகங்கள் மூடப்படலாம். இல்லையெனில், குறைவான ஊழியர்களுடன் செயல்படலாம்.