Mustafizur Rahman's IPL Stay Extended: சிஎஸ்கே அணியை விட்டு கிளம்பிய முஷ்டாஃபிசுர் ரஹ்மான்.. கெஞ்சிய சிஎஸ்கே.. காரணம் என்ன தெரியுமா?
சிஎஸ்கே அணியின் முக்கிய பவுலர் முஷ்டாஃபிசுர் ரஹ்மான் மே 1 ஆம் தேதி அவர் நாட்டிற்கு திரும்ப உள்ளார்.
ஏப்ரல் 18, விசாகப்பட்டினம் (Sports News): ஐபிஎல் (IPL) கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணி விளையாடிய 6 போட்டிகளில் 4 வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்சின் ஐ.பி.எல் 2024 தொடக்க ஆட்டத்தில் ஆட்ட நாயகனாக ஜொலித்த வங்கதேச வீரர் தான் முஷ்டாஃபிசுர் ரஹ்மான். ஐபிஎல் தொடர் முடிவடைந்ததும் 20 ஓவர் உலக கோப்பை தொடங்க இருப்பதால் அதற்கான பயிற்சியை தொடங்கும் வகையில் அவர் வங்கதேசம் திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கேற்ப ஏப்ரல் 30 ஆம் தேதி வரை மட்டுமே முஷ்டாஃபிசுர் ரஹ்மான் (Mustafizur Rahman) ஐபிஎல் போட்டியில் விளையாட வங்கதேச கிரிக்கெட் வாரியமும் அனுமதி அளித்திருந்தது. Newly Discovered Leptanilla Ant: புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட எறும்பு இனம்.. அதோட பேர் என்ன தெரியுமா?.!
ஆனால் அவரின் விடுமுறை இன்னும் ஒருநாள் நீட்டிக்க வேண்டும் என சென்னை சூப்பர் கிங்ஸ், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் வைக்கப்படிருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மே 1 ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் விளையாடும் போட்டி வரையாவது முஷ்டாஃபிசுர் ரஹ்மான் விளையாட வேண்டும் என சிஎஸ்கே விரும்பியது. தொடர்ந்து மே 1 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் முஷ்டாஃபிசுர் ரஹ்மான் விளையாட வங்கதேச கிரிக்கெட் வாரியம் (Bangladesh Cricket Board|) அனுமதி கொடுத்திருக்கிறது.
(The above story first appeared on LatestLY on Apr 18, 2024 01:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

