ஏப்ரல் 18, சென்னை (Chennai): பிரபல ஹாரி பாட்டர் தொடரின் கற்பனை வில்லன் லார்ட் வோல்ட்மார்ட்டை (Leptanilla Voldemort) ஒத்திருக்கக்கூடிய ஒரு எறும்பு இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த எறும்பு இனம் மெல்லியதாகவும், வெளிர் நிறமாகவும் காணப்படுகிறது. மேலும் இவை நிழலில் வாழக்கூடியவை. வடமேற்கு ஆஸ்திரேலியாவின் பில்பரா பகுதியில் இவை கண்டுபிடிக்கப்பட்டன. ஹாரி பாட்டர் வில்லன் போன்று இருப்பதால், அவரின் பெயரை இந்த எறும்பு இனத்துக்கு வைத்துள்ளனர். அதன்படி இந்த இனத்தின் பெயர் லெப்டானிலா வோல்ட்மார்ட். Japan Earthquake: ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதா?.!
மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தின் டாக்டர் மார்க் வோங் மற்றும் பென்னலோங்கியா சுற்றுச்சூழல் ஆலோசகர் ஜேன் மெக்ரே ஆகியோர் இந்த எறும்பு இனம் பற்றிய ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.