Bihar Cricketer Vaibhav Suryavanshi: சச்சின் மற்றும் யுவராஜ் சிங்கின் சாதனை முறியடிப்பு.. ரஞ்சி கோப்பையில் அறிமுகமான 12 வயது வீரர்..!

ரஞ்சி கோப்பையில் அறிமுகமான இளம் வயது வீரர் என்ற சாதனை படைத்தார் வைபவ் சூர்யவன்ஷி.

Bihar Cricketer Vaibhav Suryavanshi: சச்சின் மற்றும் யுவராஜ் சிங்கின் சாதனை முறியடிப்பு.. ரஞ்சி கோப்பையில் அறிமுகமான 12 வயது வீரர்..!
Vaibhav Suryavanshi (Photo Credit @Knox9693 X)

பிப்ரவரி 01, புதுடெல்லி (New Delhi): புதுடெல்லி ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் அறிமுகமான இளம் வயது வீரர் என்ற சாதனையை பீகாரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Suryavanshi) படைத்துள்ளார். மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் அறிமுகமாகி உள்ள அவருக்கு 12 வயதாகிறது. இதற்கு முன்பு யுவராஜ் சிங் 15 வயது 57 நாட்களில் விளையாடி இருந்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை பீகார் சிறுவன் சூர்யவன்ஷி முறியடித்துள்ளார். மேலும் கிரிக்கெட்டின் சகாப்தமான சச்சின் டெண்டுல்கர் 15 வயது 230 நாட்களில் ரஞ்சி கோப்பையில் அறிமுகமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. Hackers Use ChatGPT: ஹேக்கர்கள் அட்டூழியம்.. சாட் ஜிபிடி மூலம் 48 மில்லியன் நபர்களின் தகவல் திருட்டு..!

வைபவ் சூர்யவன்ஷி சாதனையை இனிவரும் வீரர்கள் தகர்ப்பது அரிதான விசயமாக பார்க்கப்படுகிறது. ரஞ்சி கோப்பை போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படும். எனவே 12 வயதிலேயே அறிமுகமான இவர் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தினால் அடுத்த அடுத்த கட்டத்திற்கு நகர்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

(The above story first appeared on LatestLY on Feb 01, 2024 02:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).