Hacker File Pic (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 01, லண்டன் (London): உலகம் முழுவதும் பெரும் புரட்சியை ஏற்படுத்திய செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பமான சாட் ஜிபிடி (ChatGPT) காரணமாக பல தொழிலாளர்கள் வேலை இழந்து வந்தாலும், இந்த தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருவதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நுழைந்துவிட்ட நிலையில் இன்னும் சில ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் புரட்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ChatGPT பயன்படுத்தி ஹேக்கர்கள் ஹேக் செய்துள்ளது பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது.

48 மில்லியன் நபர்களின் தகவல் திருட்டு: உலகின் மிகப்பெரிய கார் வாடகை நிறுவனங்களில் ஒன்று யூரோப்கார் (Europcar) ஆகும். பொதுவாக ChatGPT இடம் நாம் ஏதேனும் தகவல்களை கேட்டால் அதற்கான பதிலை அது கொடுக்கும். அதன்படி ஹேக்கர்கள் ChatGPTக்கு நாடு, பாலினம், வயது மற்றும் கார் வாடகையின் வகை போன்ற சில அடிப்படை தகவல்களை கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து, அந்த தகவலுக்கான, பெயர், முகவரி, கிரெடிட் கார்டு எண் மற்றும் வாடகை வரலாறு போன்ற தகவல்களை உருவாக்க கூறியுள்ளனர். அந்த செயற்கை நுண்ணறிவும் அவர்கள் கேட்ட தகவலை கொடுத்துள்ளது. அதுவும் 48 மில்லியன் தகவல்களை தயாரித்துக் கொடுத்துள்ளது. ஆனால் அவை அனைத்தும் முற்றிலும் தவறானது. Lakshadweep In Budget 2024: பட்ஜெட் தாக்கல் 2024.. லட்சத்தீவில் சுற்றுலா மேம்பாட்டுக்கு முன்னுரிமை.. மாலத்தீவுக்கு சாட்டையடி..!

இந்த தவறான தகவல்களை ஹேக்கர்கள் சேமித்து வைத்துக் கொண்டனர். அதனை வைத்து யூரோப்காரிடம், நீங்கள் நாங்கள் கேட்கும் பணத்தை தராவிட்டால் இந்த தகவலை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோம் என்று மிரட்டி உள்ளனர். யூரோப்கார் நிறுவனமோ, அவர்கள் கேட்ட பணத்தினை கொடுக்க மறுத்துள்ளது. தொடர்ந்து நிறுவனமானது காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். அதிகாரிகள் நடத்திய சோதனையில் திருடப்பட்ட தரவானது போலியானது என்பதனை கண்டுபிடித்தனர். மேலும் ஹேக்கர்களையும் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.