Virat Kohli Ram Mandir Invitation: ராமர் கோவில் திறப்பு விழா... இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு அழைப்பு..!
ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 16, உத்தரப்பிரதேசம் (Uttar Pradesh): வரும் ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் உள்ள பிரம்மாண்டமான ராமர் கோயிலில் பிரதிஷ்டை விழா (Ram Mandir Pranpratishtha) நடைபெற உள்ளது. அதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க ஆளும் மாநில முதலமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர். பா.ஜ.க.வைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது, எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் சினிமா பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் தலைவர்கள் அழைப்பை நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. Israel–Hamas war: இஸ்ரேல் ஹமாஸ் போர்.. 24,000-த்திற்கும் அதிகமானோர் பரிதாப பலி..!
விராட் கோலிக்கு அழைப்பு: இந்நிலையில் ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு (Virat Kohli) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவருடன் அவர் மனைவி அனுஷ்கா ஷர்மாக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கோவில் அறக்கட்டளை சார்பில் நேரில் சென்று இருவரையும் அழைத்துள்ளனர். இதற்கு முன்னர் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் தோனிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
(The above story first appeared on LatestLY on Jan 16, 2024 05:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

