KL Rahul: வெறித்தனமாக தயாராகும் கே.எல் ராகுல்; ஆசிய கோப்பை 2023-க்கு அதிரடியாக தயாராகும் அசத்தல் வீடியோ.!
தொடை காயத்திற்கான அறுவை சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறிவிட்ட கே.எல் ராகுல், அடுத்த போட்டிக்கான அனுமதியையும் பெற்று, அணியின் வெற்றிக்காக உழைக்காக தீராது பயிற்சி எடுத்து வருகிறார்.
ஆகஸ்ட் 02, விளையாட்டு (Cricket News): இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர நாயகன், வலது கை மட்டைப்பந்து ஆட்டக்காரர், சிறந்த விக்கெட் கீப்பர் கே.எல் ராகுல் (KL Rahul). கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் அறுவை சிகிச்சை செய்துகொண்டு உடல்நலத்தை கவனித்து வந்தார்.
இதற்கிடையில் ஆசிய கோப்பை 2023 போட்டிகள் ஆகஸ்ட் 30 முதல் தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி சார்பில் ரோஹித் சர்மா தலைமையிலான அணி 7 ஆசிய நாடுகளுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கே.எல் ராகுலையும் எதிர்பார்த்து காத்திருந்தனர். Sathukudi Benefits: கண் சார்ந்த பிரச்சனை, உடல் களைப்பு சரியாக, டயர் பிரியர்களுக்கு உதவும் சாத்துக்குடி; அசத்தல் நன்மைகள் இதோ.!
தற்போது உடல்நலம் தேறி வரும் கே.எல் ராகுல், அடுத்த போட்டிக்கான அனுமதியையும் பெற்றார். இதனால் அணியின் வெற்றிக்காக உழைக்காக தீராது பயிற்சி எடுத்து வருகிறார். ஆகஸ்ட் 30ல் கே.எல் ராகுல் இந்திய அணிக்கு திரும்புகிறார். அவர் பயிற்சி எடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை 2023-ல் இந்தியா சார்பில் ரோஹித் சர்மா, ஷுப்னம் ஹில், இஷான் கிஷான், விராட் கோஹ்லி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல் ராகுல், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, மொஹம்மத் சமி, முகம்மத் சிராஜ் ஆகியோர் விளையாடுகின்றனர்.