செப்டம்பர் 15, ராஞ்சி (Cricket News): இந்திய அணியின் சரித்திர நாயகன், முன்னாள் இந்திய அணியின் கேப்டன், ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கேப்டன், ரசிகர்களால் என்றும் Mr.Cool, கிரிக்கெட் தல, MSD உட்பட பல பெயர்களால் போற்றப்படும் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி.
தற்போது சர்வதேச அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள தோனி, ஐ.பி.எல் தொடரில் தொடர்ந்து விளையாடி வருகிறார். தனது மனம்கவர்ந்த தமிழக ரசிகர்களுக்காக, திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி முதல் திரைப்படமாக தமிழ் திரைப்படத்தை தயாரித்து வழங்கி பலரையும் நெகிழ்ச்சியுறவைத்தார். Mark Antony HD Leaked: திருட்டு விசிடி-ஐ ஒழிக்க வந்தவருக்கே இந்த நிலைமையா?.. விஷாலின் மார்க் ஆண்டனி HD தரத்தில் லீக்..!
தமிழகத்தின் செல்லப்பிள்ளையாக இருக்கும் தோனி, எப்போதும் இளகிய மனம் கொண்டவர். ஆனால், தனக்கான செயலை துடிப்புடன் செய்யும் ஆவேசக்காரரும் கூட என கூறலாம். அவரின் கோபம் கண்களில் கூட தெரியாதது.
இந்நிலையில், தோனி இளம் கிரிக்கெட்டர் ஒருவருக்கு, மைதானத்திற்கு செல்ல லிப்ட் கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. தோனி தனது யமஹா ஆர்டி 350 ரக வாகனத்தில் பயணிக்கும்போது, அவர் தான் விளையாடும் மைதானத்தில் பயிற்சி பெரும் இளைஞருக்கு உதவி செய்தார்.
Nothing to see here. Just #MSDhoni living his best semi retired life and a very lucky young cricketer who got a lift on his #YAMAHA RD350. 🏍️ #Jharkhand #Dhoni #msd #mahi #ranchi pic.twitter.com/EipYkBptsU
— Jharkhand Jatra (@JharkhandJatraa) September 15, 2023