![](https://objectstorage.ap-mumbai-1.oraclecloud.com/p/H7eKs7B2tVOw_abojbrxoIB_6t5W29G2St7cuQZAAZxzK6otiY2itlU_lhorOfFB/n/bmd8qrbo34g7/b/uploads-DataTransfer/o/cmstamil.letsly.in/wp-content/uploads/2023/09/Mark-Antony-Poster-Photo-Credit-Twitter-380x214.jpg)
செப்டம்பர் 15, சென்னை (Cinema News): ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், நடிகர்கள் விஷால், எஸ்ஜே சூர்யா, அபிநயா, ரித்து வர்மா, ரெடின் கிங்ஸ்லி, சுனில், செல்வராகவன், நிழல்கள் ரவி, ஒய்.ஜி மகேந்திரன் உட்பட பலர் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் மார்க் ஆண்டனி.
கேங்ஸ்டரிசம் தொடர்பான கதையில், காலத்தை கடந்து அழைத்துச்செல்லும் இயந்திரமும் உருவாகி கதைக்களத்தை விறுவிறுப்பாக மாற்றி ரசிகர்களை கொண்டாடவைத்துள்ள திரைப்படமாக இது அமைந்துள்ளது. Aditya L1 Update: நான்காவது புவிவட்டப்பாதை உயர்வையும் வெற்றிகரமாக கடந்தது ஆதித்யா எல்1; ஜனவரி 2024ல் சூரியனை நெருங்கும்.!
விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யாவின் அட்டகாசமான நடிப்பில் உருவாகி கலக்கல் வெற்றி திரைப்படமாக அமைந்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படம், தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு உட்பட பிற மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், விஷாலின் மார்க் ஆண்டனி திரைப்படம் திருட்டுத்தமான விடீயோக்களை பதிவிடும் இணையதளங்களில் எச்டி தரத்தில் வெளியாகியுள்ளது படக்குழுவுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.