MS Dhoni Cool Look: "பேரமைதிக்குள் ஒரு புயல்" தல தோனியின் புது லுக்.. அசத்தல் கிளிக்ஸ் இதோ.!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் நிறைவுபெற்றதும், ஐ.பி.எல் தொடருக்கான போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்காக ஒவ்வொரு அணியினரும் தயாராகி வருகின்றனர். அடுத்த 2 மாதம் கிரிக்கெட் கொண்டாட்டங்களுக்கு பஞ்சமே இருக்காது.
பிப்ரவரி 12, சென்னை (Cricket News): இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், ஐ.பி.எல் தொடரில் சென்னை அணியை தலைமையேற்று வழிநடத்தி வரும் நட்சத்திர ஆட்டக்காரர் எம்.எஸ் தோனி. விக்கெட் கீப்பிங், பேட்டிங் என தனது தலைமையிலான அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்று, அதிரடியாக மைதானத்தில் விளையாடி பார்வையாளர்களை பரவசப்படுத்தும் தோனியின் தரிசனம் விரைவில் நமக்கு கிடைக்கவுள்ளது.
ஐபிஎல் போட்டிகள் விரைவில் தொடக்கம்: மார்ச் மாதம் 23ம் தேதியில் தொடங்கி மே மாதம் 29ல் நிறைவுபெறும் ஐ.பி.எல் போட்டிக்காக தற்போது வீரர்கள் தொடர்ந்து தயாராகி வருகின்றனர். இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகள் நிறைவுபெற்றதும், இந்திய அணியில் உள்ள வீரர்கள் பலரும், இந்திய அளவில் நடைபெறும் ஐ.பி.எல் தொடருக்காக பிரிந்து தங்களின் அணிக்காக தனித்திறனுடன் விளையாடுவார்கள் என்பதால், மார்ச்சில் தொடங்கி மே வரை கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான காலமாக இருக்கப்போகிறது.
சென்னை சூப்பர்கிங்ஸ் அணி (Chennai Super KIngs CSK): சென்னை அணியை பொறுத்தமட்டில் கடந்த 2023 ஐ.பி.எல் வெற்றிக்கோப்பையை பலகட்ட போராட்டங்களுக்கு பின் அடைந்தது. அதேபோல 2024லிலும் கோப்பையை கைப்பற்ற முனைப்புடன் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை சூப்பர்கிங்ஸ் அணியில் தோனி, மொயீன் அலி, தீபக் சாஹர், டெவோன் கான்வே, துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, அஜய் மண்டல், முகேஷ் சவுத்ரி, மதீஷா பத்திரனா, அஜிங்க்யா ரஹானே, ஷேக் சிங் ரஷீத், ஷேக் சிங் ரஷீத், எம். , நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். Hyderabad Shocker: அம்மாவும் - மகளும் செய்யிற வேலையா இது? பாஜக பிரமுகரை ஹனி ட்ராப்பில் வீழ்த்தி கொடூர கொலை.. அதிரவைக்கும் சம்பவத்தின் பகீர் பின்னணி.!
லேட்டஸ்ட் கிளிக் உங்களின் லேட்டஸ்டலி (LatestLY Tamil)-யில்: இந்நிலையில், சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் எக்ஸ் பக்கத்தில், தல தோனியின் அசத்தல் கிளிக்ஸ் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அமைதியான நபர் போல, மனதில் ஆயிரம் புயல்களை கடந்த பக்குவதுடனும் அமர்ந்திருக்கும் நபராக அப்புகைப்படத்தில் தோனி இடம்பெற்று இருக்கிறார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த அட்டகாசமான புகைப்படம் உங்களின் பார்வைக்காக இணைக்கப்பட்டுள்ளது.
Cool - Cooler - Thala! 😎💛 pic.twitter.com/hjA6sbYIWN
— Chennai Super Kings (@ChennaiIPL) February 12, 2024
(The above story first appeared on LatestLY on Feb 12, 2024 12:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

