பிப்ரவரி 12, ஹைதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் மற்றும் பாஜக பிரமுகர் சிங்கோட்ட ராமண்ணா. கடந்த பிப்ரவரி 07ம் தேதி இவர் மர்ம கும்பலால் உடலில் 50 க்கும் மேற்பட்ட வெட்டுக்காயத்துடன், ஆணுறுப்பை சிதைத்தவாறு கொடூர கொலை செய்யப்பட்டார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிந்த காவல் துறையினர், ராமண்ணாவை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
பாஜக பிரமுகர் கொலையில் அதிர்ச்சி தகவல்: இந்நிலையில், ராமண்ணாவை கொலை செய்ததாக அவரின் கள்ளக்காதலி ஹிமாம் பீ, அவரின் மகள் நசீமா, இவர்களின் கூட்டாளிகள் மணிகண்டா, வினோத், முகமது, கைஸர், சிவகுமார், நிகில், துன்னகுமார் என 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடைபெற்ற விசாரணையில் அதிர்ச்சித்தரும் தகவல் அம்பலமானது. முதலில் ஹிமாம் பீ ராமண்ணா தன்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த சூழலில், மகள் மீது பார்வையை திரும்பியதால் கொலை செய்ததாக தெரிவித்தார். Lightning Strike Youth Died: மைதானத்தில் நண்பர்கள் கண்முன்னே நடந்த கொடூரம்; கால்பந்து விளையாடியவர் மின்னல் தாக்கி பலி.. பதறவைக்கும் காட்சிகள்.!
குற்றவழக்கில் தொடர்புடைய பெண்: ஆனால் , அவரின் பேச்சுக்களில் உண்மை இல்லாததை உணர்த்த அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஹனி ட்ராப் முறையில் பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. கைதான ஹிமாம் பீ ஏற்கனவே இளம்பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் தள்ளிய வழக்கிலும் கைது செய்யப்பட்டு இருக்கிறார். முதல் கணவரை இழந்து, மகளுடன் வசித்து வந்த ஹிமாம் பீ, பின்னாளில் பாலியல் தொழிலில் இறங்கி இருக்கிறார்.
தாயும் - மகளுமான அதிர்ச்சி செயல்: செல்வந்தர்களை குறிவைத்து, அவர்களை தங்களின் வலையில் விழவைக்கும் ஹிமாம் பீ, ஹனி ட்ராப் முறையில் ஏமாற்றி இலட்சக்கணக்கில் பணம்பறிக்கும் செயலில் பலமுறை ஈடுபட்டு இருக்கிறார். கடந்த 2019ம் ஆண்டு முதல் பாலியல் தொழில், ஹனி ட்ராப் வருமானம் என தாயும்-மகளும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து இருக்கின்றனர். சில அப்பாவிகளையும் பொய்யான வழக்கில் சிக்கவைத்து இருக்கின்றனர். SpiceJet Layoff: 1400 பணியாளர்களை வீட்டிற்கு அனுப்பியது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்; அதிர்ச்சி தந்த பணிநீக்கம்.!
பணத்திற்கு ஆசைப்பட்டு நடந்த பயங்கரம்: இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது வலையில் விழுந்த பாஜக பிரமுகர் & தொழிலதிபர் ராமண்ணாவுடன் வாழ்ந்து வந்த ஹிமாம் பீ, தனக்கு தேவையான பணத்தை பெற்றுள்ளார். ஒருகட்டத்தில் அவரிடம் இருக்கும் அதிக பணத்திற்கு ஆசைப்பட்ட ஹிமாம் பீ, அதனை பறிக்க எடுத்த முயற்சிகள் இறுதியில் கொலையில் முடிந்தது தெரியவந்துள்ளது. கொலை சம்பவத்திற்காக நசீமாவை காதலித்து வந்த மணிகண்டாவிடம், தொழிலதிபர் தன்னை கொடுமைப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
அதிர்ந்துபோன அதிகாரிகள்: காதலியின் மீது ஆசை, அவள் தெரிவித்த தகவல் என பாஜக பிரமுகரின் மீது ஆத்திரமடைந்த மணிகண்டா, அவருக்கு எதிராக இருந்த வினோத்தை தன்வசப்படுத்தி, தாய் - மகளின் ஆதரவுடன் கொடூர கொலையை அரங்கேற்றி இருக்கிறார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நிறைவடைந்தபின்னரே காவல் துறையினருக்கு அதிர்ச்சியாக இத்தகவல் தெரியவந்துள்ளது.