மே 03, புளோரிடா (Sports News): உலகளவில் புகழ்பெற்ற போர்த்துகீசிய கால்பந்தாட்ட (Football Player) விளையாட்டு நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo). இவர் கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கால்பந்தாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, பினான்ஸ் (Binance) எனப்படும் கிரிப்டோ கரன்சியை விளம்பரப்படுத்தினார். தனது ரசிகர்கள் பினான்சின் கிரிப்டோ கரன்சியை முதலீடு செய்யவும் அவர் கோரிக்கை வைத்த நிலையில், பினான்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி செங்கிபங் ஜாவோ (Changpeng Zhao) கால்பந்தாட்ட விளையாட்டுகளில் எதிர்காலத்தில் முதலீடுகள் அதிகம் நடக்கும் என்றும் கூறினார். New Thug In Town ThugLife: மங்காத்தா அஜித் போல, காரில் வந்து மாஸ் காட்டிய சிம்பு... கமல் ஹாசனின் தக் லைப் நியூ தக் இன் டவுன் வீடியோ உள்ளே.! 

1 பில்லியன் அமெரிக்க டாலர் மோசடி: இந்நிலையில், ரொனால்டோவின் பேச்சைக்கேட்டு கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்த அவரின் ரசிகர்கள், பினான்சின் கிரிப்டோ கரன்சியில் ஒரு காயினை 77 அமெரிக்கா டாலர் கொடுத்து வாங்கி இருந்தனர். பினான்ஸ் நிறுவனத்துக்கு இதன் வாயிலாக 1 பில்லியன் டாலர் மொத்தமாக வருவாய் கிடைத்தது. ஆனால், சில மாதங்களில் விற்பனை சரிவு உட்பட பல காரணங்களை கூறிய பினான்ஸ், முதலீட்டாளர்கள் வாங்கி வைத்த காயினின் தொகை 1 டாலருக்கு குறைவதாக தெரிவித்துள்ளது. இதனால் தாங்கள் ஏமாற்றப்படுவதை உணர்ந்த மக்கள், புளோரிடா நீதிமன்றத்தில் மோசடி குறித்து மனுதாக்கல் செய்தனர். 16 Aged Minor Girl Gang Raped: ஐவர் கும்பலால் 16 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம்; நட்பாக பழகி நம்பவைத்து நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரம்.! 

ரொனால்டோவின் கோரிக்கை நிராகரிப்பு: இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் அமர்வில், வழக்கில் இருந்து தன்னை விலக்க வேண்டும் என மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணைக்கு நீதிபதிகள் ஏற்றுக்கொண்டாலும், தங்களின் தீர்ப்பில் ரொனால்டோவை இவ்வழக்கில் இருந்து விடுவிக்க இயலாது என கூறியுள்ளனர். இதனால் ரொனால்டோ தற்போது சட்டரீதியாக மோசடி விவகாரத்தை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அவர் பாதுகாப்பற்ற முதலீடுகளை ஊக்குவித்ததாகவும் நீதிபதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டு, அவரின் கோரிக்கை நிராகரிப்பு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக ரொனால்டோ தனியார் நிறுவனத்தின் பானத்தை தனது அருகில் இருந்து அகற்றியதால், அந்நிறுவனத்திற்கு சில மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டு இருந்து குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஆன்லைன் கடன் மோசடி, கிரிப்டோ கரன்சி போன்ற சர்ச்சையில் ஈடுபட்ட சிக்கிய பினான்ஸ் (Binance Online Loan) நிறுவனத்தின் செயல்பாடுகள், ஜனவரி 2024ல் மத்திய அரசால் முடக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.