மே 08, சென்னை (Cinema News): கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் (Rajkamal Films International), ரெட் ஜெயன்ட்ஸ், மெட்ராஸ் டால்கிஸ் நிறுவனங்களின் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர் ரஹ்மான் (AR Rahman) இசையில், ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங்கில் உருவாகிவரும் திரைப்படம் தக் லைப் (Thuglife). கமல் ஹாசனின் 234வது திரைப்படமான தக் லைப், ஆக்சன்-திரில்லர் பாணியில் அட்டகாசமாக உருவாகிறது. 16 Aged Minor Girl Gang Raped: ஐவர் கும்பலால் 16 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம்; நட்பாக பழகி நம்பவைத்து நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரம்.! 

படக்குழுவினர்: நடிகர்கள் கமல் ஹாசன், திரிஷா, சிலம்பரசன், அபிராமி, நாசர், அலி பாசில், கெளதம் கார்த்திக், வையாபுரி உட்பட பலர் நடிக்க உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, புதுடெல்லி ஆகிய இடங்களில் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. மணிரத்னம் இயக்கத்தில், நடிகர் கமல் ஹாசன் 1987ல் வெளியான நாயகன் திரைப்படத்திற்கு பின்னர் மீண்டும் இணைந்துள்ளார். இதனால் இப்படம் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. Air India Express Flights Cancel: மூத்த அதிகாரியின் திடீர் விடுமுறையால் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் 70 விமானங்கள் ரத்து; விமான போக்குவரத்து அமைச்சகம் விசாரணை.!

சிம்புவின் ப்ரோமோ வீடியோ: சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் மற்றும் ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வந்தது. இந்நிலையில், சிலம்பரசன் காட்சிகள் தொடர்பான புதிய வீடியோ ஒன்று வெளியாக இருப்பதாக முன்னதாகவே படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டு, தற்போது அந்த காட்சிகள் வெளியாகியுள்ளது. காரில் மங்காத்தா அஜித் போல வரும் சிம்பு, எதிரிகளை துப்பாக்கிகளால் சுடும் அசத்தல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.