MS Dhoni Chennai Baasha: சென்னை அணியின் பாட்ஷாவாக எம்.எஸ் தோனி.. மாஸ் பி.ஜி.எம்முடன் களமிறங்கி அசத்தல்; வைரல் வீடியோ.!
நேற்றைய சென்னை Vs பஞ்சாப் அணிகள் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி அடைந்தாலும், தோனி எதிர்கொண்ட இறுதி 4 பந்துகளும், அவர் களமிறங்குகையில் ஒளிபரப்பான பாட்ஷா படத்தின் பாடலும் தான் ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது.
மே 01, சேப்பாக்கம் (Sports News): டாடா ஐ.பி.எல் 2023 போட்டியில் 41 வது ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் - பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதிக்கொண்டன. முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இந்த ஆட்டத்தில் சென்னை அணி முதல் சுற்றில் 4 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது. 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி மறுமுனையில் களமிறங்கி, 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்து வெற்றி அடைந்தது. SC On Dissolution Of Marriage: பரஸ்பர சம்மதத்துடன் 6 மாதங்களில் விவாகரத்து வழங்கலாம் – டெல்லி உச்சநீதிமன்றம் தீர்ப்பு.!
சென்னை அணி சார்பில் விளையாடிய கான்வே இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 52 பந்துகளில் 92 ரன்களை குவித்து அசத்தினார். பிற வீரர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். மறுமுனையில் பஞ்சாப் அணியினர் 6 விக்கெட்டை இழந்தாலும், அனைவரும் நிதானமாக ஆடி அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
இந்த ஆட்டத்தின் போது இறுதியாக 4 பந்துகள் பேட்டிங் ஆடிய நிலையில், அதில் 2 சிக்ஸர் ஒரு சிங்கிள் என 13 ரன்கள் எடுத்தார். அவர் ஜடேஜாவின் விக்கெட்டுக்கு பின்னர் களமிறங்கியபோது, சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த பாட்ஷா படத்தின் பாடல் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது. அப்போது, அரங்கமே அதிர ரசிகர்கள் உற்சாகமாக கரகோஷம் எழுப்பினர்.
#MSDhoni𓃵 entry today’s match with #Thalaivar Marana mass Baasha BGM 🔥🔥
#CSKvPBKS | #Yellove | #WhistlePodu | #PBKSvCSK | #CSK | #Rajinikanth𓃵 | #Rajinikanth | #SuperstarRajinikanth | #superstar @rajinikanth | #Jailer | #MSdhoni pic.twitter.com/2SGmUohDyC
— Suresh Balaji (@surbalu) April 30, 2023
MSD entry with Baasha music 🥵🥵🔥🔥🔥 Goosebumps
#MSDhoni𓃵 #DHONI #CSKvPBKS #CSK #ChennaiSuperKings #IPL2O23 pic.twitter.com/TVPsaSOLrN
— Trend Mamz (@TrendMamz) April 30, 2023
(The above story first appeared on LatestLY on May 01, 2023 02:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

