Supreme Court of India | Divorce (Photo Credit: LiveLaw India)

மே 01, புதுடெல்லி (New Delhi): இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி, ஒவ்வொரு விஷயத்திற்கும் நீதிமன்றம் வாயிலாக நாம் தீர்ப்பை பெற்றுக்கொள்ளலாம். அவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, நீதிபதி நடுநிலையோடு வழக்குக்கு அனுகூலமான தீர்ப்பை வழங்குவார்.

இந்த நிலையில், டெல்லி உச்சநீதிமன்றத்தில் தம்பதிகள் விரைந்து தங்களுக்கு விவாகரத்து வழங்க கூறி மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் இறுதி கட்டத்தை எட்டி தீர்ப்பு வாசிக்கப்பட்டது.

அப்போது, அரசியலமைப்பின் 142வது பிரிவின் கீழ் சிறப்பு அதிகாரங்களை செயல்படுத்துவதன் மூலம் திருமண முறிவின் அல்லது தம்பதிகளுக்கு இடையேயான பிரிவின் அடிப்படையில் விவாகரத்து வழங்க முடியுமா? என்பது குறித்து உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் இருதரப்பு விசாரணையும் நடத்தப்பட்டன. Green Chemical Peas: அச்சச்சோ.. என்னது இது?.. பச்சை நிற பட்டாணியில் பச்சையாக வெளியேறும் ரசாயனம்.. சாயம் பூசி விற்கும் கொடுமை.!

அதன்படி "சட்டப்பிரிவு 142-ன் கீழ் அதிகாரங்களை கவனித்தால், "திருமண முறிவு அல்லது பிரிவு" என்ற அடிப்படையில் திருமணங்களை கலைக்க முடியும். பரஸ்பர சம்மதத்தின் மூலம் விவாகரத்து செய்ய 6 மாதங்கள் கட்டாயக் காத்திருப்பு காலத்தை நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கலாம்.

142வது பிரிவின் அதிகாரங்கள் பொதுக் கொள்கையின் அடிப்படைகளின் கீழ் பயன்படுத்தப்பட வேண்டும். இரண்டு தீர்ப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு 6 மாத கால அவகாசம் வழங்கப்படலாம்.

இந்த நீதிமன்றம் திருமண முறிவின் அடிப்படையில் திருமணத்தை கலைக்க முடியும் என்று நாங்கள் (நீதியரசர்கள்) கருதுகிறோம். திருமணத்தின் மீளமுடியாத முறிவு எப்போது ஏற்படும் என்பதை தீர்மானிக்கக்கூடிய காரணிகளையும் நாங்கள் வகுத்துள்ளோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.