ENG Vs IND 3rd Test, Toss: இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.. பும்ரா, ஆர்ச்சர் வருகை..!

இங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ENG Vs IND 3rd Test, Toss (Photo Credit: @CricketNDTV X)

ஜூலை 10, லண்டன் (Sports News): இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடருக்கு, ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி (Anderson-Tendulkar Trophy) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த டெஸ்ட் தொடர், ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) நேரடி ஒளிபரப்பு செய்கிறது. அனைத்து போட்டிகளும், இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. லீட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிர்மிங்ஹாமில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில், இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலிரண்டு போட்டிகள் முடிவில், 1-1 என தொடர் சமநிலையில் உள்ளது. ENG Vs IND 3rd Test: இங்கிலாந்து - இந்தியா 3வது டெஸ்ட்.. நாளை லண்டனில் மோதல்..!

இங்கிலாந்து எதிர் இந்தியா (England Vs India):

இந்நிலையில், இன்று (ஜூலை 10) இங்கிலாந்து - இந்தியா அணிகள் (ENG Vs IND 3rd Test) மோதும் 3வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி, சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியை எதிர்கொள்கிறது. புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுவதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இங்கிலாந்து (பிளேயிங் லெவன்):

ஜாக் கிராலி, பென் டக்கெட், ஓலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஷோயப் பஷீர்.

இந்தியா (பிளேயிங் லெவன்):

யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், கருண் நாயர், ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement