ENG Vs IND 3rd Test: இங்கிலாந்து - இந்தியா 3வது டெஸ்ட்.. நாளை லண்டனில் மோதல்..!

இங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி, நாளை (ஜூலை 10) லண்டனில் நடைபெறவுள்ளது.

ENG Vs IND 3rd Test: இங்கிலாந்து - இந்தியா 3வது டெஸ்ட்.. நாளை லண்டனில் மோதல்..!
ENG Vs IND 3rd Test (Photo Credit: @Sanj4201Murmu X)

ஜூலை 09, லண்டன் (Sports News): இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடருக்கு, ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி (Anderson-Tendulkar Trophy) என பெயரிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து - இந்தியா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) நேரடி ஒளிபரப்பு செய்கிறது. அனைத்து போட்டிகளும், இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. லீட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிர்மிங்ஹாமில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில், இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலிரண்டு போட்டிகள் முடிவில், 1-1 என தொடர் சமநிலையில் உள்ளது. SL Vs BAN 3rd ODI: இலங்கை அபார வெற்றி.. 2-1 என தொடரை வென்று அசத்தல்..!

இங்கிலாந்து எதிர் இந்தியா (England Vs India):

இந்நிலையில், நாளை (ஜூலை 10) இங்கிலாந்து - இந்தியா அணிகள் (ENG Vs IND) மோதும் 3வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில், இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா இணையவுள்ளார். மேலும், இங்கிலாந்து அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் நீண்ட நாட்களுக்குப்பின் அணியில் விளையாடவுள்ளார். இதனால் இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.

இங்கிலாந்து அணி வீரர்கள்:

பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் டக்கெட், ஹரி புரூக், ஜேக்கப் பேத்தல், ஜோ ரூட், ஒல்லி போப், ஜாக் க்ராலி, கிறிஸ் வோக்ஸ், ஜேமி ஓவர்டன், ஜேமி ஸ்மித், பிரைடன் கார்ஸ், ஜோஸ் டங், சாம் குக், ஷோயிப் பஷீர், ஜோப்ரா ஆர்ச்சர்.

இந்திய அணி வீரர்கள்:

சுப்மன் கில் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், நிதிஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜூரல், ரிஷப் பந்த், ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா. குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

(The above story first appeared on LatestLY on Jul 09, 2025 04:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).