ENG Vs IND 4th Test, Day 2: களத்திற்கு திரும்பிய ரிஷப் பந்த்.. வலுவான நிலையில் இந்தியா..!

இங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டியின், 2ஆம் நாள் மதிய உணவு இடைவேளை வரை, இந்தியா 6 விக்கெட்களை இழந்து 321 ரன்கள் அடித்துள்ளது.

ENG Vs IND 4th Test, Day 2: களத்திற்கு திரும்பிய ரிஷப் பந்த்.. வலுவான நிலையில் இந்தியா..!
ENG Vs IND 4th Test Day 2 Lunch (Photo Credit: @BCCI X)

ஜூலை 24, மான்செஸ்டர் (Sports News): இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடருக்கு, ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி (Anderson-Tendulkar Trophy) என பெயரிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து - இந்தியா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, ஜியோ ஹாட்ஸ்டாரில் (Jio Hotstar) நேரலையில் பார்க்கலாம். அனைத்து போட்டிகளும், இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. நடந்து முடிந்த 3 போட்டிகள் முடிவில், 2-1 என இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. ENG Vs IND 4th Test, Day 1: ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன் அபாரம்.. காயத்தால் வெளியேறிய ரிஷப் பந்த்..!

இங்கிலாந்து எதிர் இந்தியா (England Vs India):

இந்நிலையில், நேற்று (ஜூலை 23) இங்கிலாந்து - இந்தியா அணிகள் (ENG Vs IND) மோதும் 4வது டெஸ்ட் போட்டி ஓல்ட் டிராஃபோர்ட், மான்செஸ்டரில் தொடங்கியது. இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு கேஎல் ராகுல் 46 ரன்களில் அவுட்டாகினார். ஜெய்ஸ்வால் நிதானமாக விளையாடி அரைசதம் (58 ரன்கள்) கடந்து அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் கில் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அதிரடியாக விளையாடிய ரிஷப் பந்த் 37 ரன்னில் காயம் காரணமாக ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். பொறுமையாக விளையாடி வந்த சாய் சுதர்சன் 61 ரன்னில் அவுட்டானார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 4 விக்கெட்களை இழந்து 264 அடித்துள்ளது. ஜடேஜா 19*, ஷர்துல் தாக்கூர் 19* ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

வலுவான நிலையில் இந்தியா:

இந்நிலையில், 2ஆம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆரம்பத்திலேயே ஜடேஜா 20 ரன்னில் அவுட்டானார். அதிரடி காட்டிய ஷர்துல் தாக்கூர் 41 ரன்களில் நடையை கட்டினார். நேற்று காயத்தால் வெளியேறிய ரிஷப் பந்த் இன்று களமிறங்கினார். 2ஆம் நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 6 விக்கெட்களை இழந்து 321 ரன்கள் அடித்துள்ளது. ரிஷப் பந்த் 39*, சுந்தர் 20* ரன்களுடன் களத்தில் உள்ளனர். மழை காரணமாக மதிய உணவு இடைவேளை 10 நிமிடத்திற்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டது.

இங்கிலாந்து (பிளேயிங் லெவன்):

ஜாக் க்ராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், லியாம் டாசன், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர். BAN Vs PAK 3rd T20I, Toss: பாகிஸ்தானுக்கு எதிரான 3வது போட்டி.. வங்கதேசம் டாஸ் வென்று பவுலிங் தேர்வு..!

இந்தியா (பிளேயிங் லெவன்):

யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், அன்ஷுல் கம்போஜ்.

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).