ஜூலை 24, தாக்கா (Sports News): பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அனைத்து போட்டிகளும், தாக்காவில் உள்ள ஷேர் பங்களா கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கும். இவ்விரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடரை ஃபேன் கோட் செயலியில் நேரலையில் பார்க்கலாம். நடந்து முடிந்த முதலாவது டி20 போட்டியில், வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில், வங்கதேச அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. BAN Vs PAK 3rd T20I: வங்கதேசம் - பாகிஸ்தான் 3வது டி20.. ஆறுதல் வெற்றி பெறுமா பாகிஸ்தான்..?
வங்கதேசம் எதிர் பாகிஸ்தான் (Bangladesh Vs Pakistan):
இந்நிலையில், வங்கதேசம் - பாகிஸ்தான் (BAN Vs PAK) அணிகள் மோதும் 3வது டி20 போட்டி, இன்று (ஜூலை 24) தாக்காவில் நடைபெறுகிறது. லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணி, சல்மான் ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 24 சர்வதேச டி20 போட்டிகளில் மோதியுள்ளன. வங்கதேச அணி 5 போட்டிகளிலும், பாகிஸ்தான் அணி 19 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. பாகிஸ்தான் அணி ஏற்கனவே தொடரை இழந்த நிலையில், கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெரும் முனைப்புடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
வங்கதேசம் (பிளேயிங் லெவன்):
முகமது நைம், தன்சித் ஹசன் தமீம், லிட்டன் தாஸ் (கேப்டன்), ஜாக்கர் அலி, மெஹிதி ஹசன் மிராஸ், ஷமிம் ஹொசைன், மஹேதி ஹசன், முகமது சைபுதீன், தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், நசும் அகமது.
பாகிஸ்தான் (பிளேயிங் லெவன்):
சைம் அயூப், சாஹிப்சாதா ஃபர்ஹான், முகமது ஹாரிஸ், சல்மான் ஆகா (கேப்டன்) ஹசன் நவாஸ், ஹுசைன் தலாத், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், அப்பாஸ் அப்ரிடி, அகமது டேனியல், சல்மான் மிர்சா.