ENG Vs SA ODI Series: தொடரை இழந்தாலும் இறுதிப்போட்டியில் இமாலய வெற்றி... இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டியில் 27 ஆண்டுகள் கழித்து சாதனை.!

சொந்த மண்ணில் இங்கிலாந்து கோப்பையை இழந்தாலும், 3 வது தொடரில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக இமாலய வெற்றி அடைந்தது மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளது. இங்கிலாந்து - தென்னாபிரிக்கா அணிகளுக்கு (England Vs South Africa) இடையேயான ஆட்டம் இரண்டு அணிக்கும் புதிய சாதனையை தந்துள்ளது.

England Vs South Africa ODI Series 2025 (Photo Credit: @INDCricketGuide X)

செப்டம்பர் 08, லண்டன் (Cricket News): இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. இதில் இங்கிலாந்து அணியை சொந்த மண்ணில் துவம்சம் செய்த தென்னாப்பிரிக்கா அணி, தொடரை இரண்டு வெற்றிகளுடன் கைப்பற்றியது. இறுதிப்போட்டி நேற்று தொடங்கி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தபோது, அந்த அணியின் சார்பில் விளையாடிய ஸ்மித் 48 பந்துகளில் 62 ரன்னும், ஜோ ரூட் 96 பந்துகளில் 102 ரன்னும், ஜேக்கப் 82 பந்துகளில் 112 ரன்னும் அடித்து அசத்தியிருந்தனர். ஜாஸ் பட்லர் 32 பந்துகளில் 62 ரன்கள் எடுத்திருந்தார். TVS Ntorq 150: டிவிஎஸ் என்டார்க் 150 ஸ்கூட்டர் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ..!

இங்கிலாந்து அணி வெற்றி:

மொத்தமாக 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 414 ரன்களை இங்கிலாந்து அணி சேகரித்து இருந்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிக் செய்ய வேண்டும் என்ற நிலையில், மிகப்பெரிய தடுமாற்றத்தை எதிர்கொண்டது. அந்த அணியில் முக்கிய வீரர்களான தொடக்க ஆட்டக்காரர்கள் 5 பேர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினர். இதனால் தென்னாபிரிக்க அணிக்கு மிகப்பெரிய தோல்வி உறுதியான நிலையில், அந்த அணியின் மொத்த வீரர்களும் சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 20.5 ஓவர்களில் 10 விக்கெட் இழந்த தென்னாப்பிரிக்காவில் 72 ரன்கள் அடித்து மிகப்பெரிய அளவில் தோல்வி அடைந்தது.

இந்த தொடரை தென்னாபிரிக்க அணி கைப்பற்றி இருந்தாலும், இறுதி போட்டியில் அவர்கள் கிட்டத்தட்ட 342 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றது. இது அவர்களின் தொடரை கைப்பற்றிய வெற்றியை கொண்டாட இயலாத சூழலையும் உண்டாக்கியது. இதன் வாயிலாக இந்தியா வசம் இருந்த அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்த அணி என்ற பெருமையை இங்கிலாந்து படைத்து. இங்கிலாந்து அணியின் வீரர்கள் ஜோ ரூட், ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் திறம்பட விளையாடி அணிக்கு வெற்றி சேர்த்தனர். இந்த தொடரை 27 ஆண்டுகளுக்கு பின் தென்னாபிரிக்க அணி இங்கிலாந்து மண்ணில் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜேக்கப் பெத்தல் அசத்தல் ஆட்டம்:

ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் இங்கிலாந்து அணி தென்னாபிரிக்க அணிக்கு எதிராக இமாலய வெற்றி:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement