TVS Ntorq 150 (Photo Credit: @EngineerInsidee X)

செப்டம்பர் 05, சென்னை (Technology News): டிவிஎஸ் நிறுவனம் தனது புதிய டிவிஎஸ் என்டார்க் 150 ஸ்கூட்டரை (TVS Ntorq 150 Scooter) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. டர்போ ப்ளூ, ரேஸிங் ரெட், நிட்ரோ கிரீன், ஸ்டெல்த் சில்வர் என மொத்தம் 4 விதமான கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டர் ஆரம்ப விலையாக ரூ1.19 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் முழு விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம். Realme 15T: 7000mAh பேட்டரி.. ரியல்மி 15டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.. விலை மற்றும் விவரக்குறிப்புகள் இதோ..!

டிவிஎஸ் என்டார்க் 150 சிறப்பம்சங்கள்:

  • டிவிஎஸ் என்டார்க் 150 ஸ்கூட்டர், ஸ்டாண்ட்ர்டு மற்றும் டிஎஃப்டி ஆகிய 2 வேரியன்ட்களிலும் ஸ்டிரீட், மற்றும் ரேஸ் ஆகிய 2 விதமான ரைடு மோடுகள் உள்ளன. இதுதவிர டிவிஎஸ் ஐகோ அசிஸ்ட், டிராக்ஷன்கண்ட்ரோல், அட்ஜெஸ்டபிள் பிரேக் லிவர்கள், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் சிஸ்டம் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் உள்ளன.
  • மேலும், 149.7 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின், ஏர்கூல்டு ஃப்யூயல் இன்ஜெக்டட் இன்ஜினாக வழங்கப்பட்டுள்ளது. ஓசி3 ஆயில் கூல்டு தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. இதன்மூலம், இன்ஜின் 13.2 பிஎஸ் பவரையும் 14.2என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.
  • என்டார்க் 150 ஸ்கூட்டர், 0-60 கி.மீ வேகத்தை 6.3 நொடியில் தொட்டுவிடும். அதிகபட்சமாக 104 கி.மீ வேகத்தில் செல்லும் திறனுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 5.8 லிட்டர் பெட்ரோல் டேங்க், 115 கிலோ எடை, முன்பக்கம் 100/80-12 மற்றும் பின்பக்கம் 110/80-12 என்ற அளவில் டியூப்லெஸ் டயர்கள் உள்ளன.
  • முன்பக்கம் 220 மிமீ அளவில் டிஸ்க் பிரேக்கும், பின்பக்கம் 130 மிமீ அளவில் டிரம் பிரேக்கும் உள்ளது. சஸ்பென்சன் பொறுத்தவரையில், முன்பக்கம் டெலஸ்கோபிக் ஃபோர்க், பின்பக்கம் ஹைட்ராலிக் டேம்பிங் சஸ்பென்சன் கொடுக்கப்பட்டுள்ளது.
  • ஸ்கூட்டரின் நீளத்தை பொறுத்தவரை, 1861 மிமீ நீளமும், 740 மிமீ அகலமும், 1120 மிமீ உயரமும் 1285 மிமீ வீல் பேஸூம் கொண்டுள்ளது. இதில் 155 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், 765 மிமீ சீட் நீளம், 770 மிமீ சீட் உயரம், 22 லிட்டர் ஸ்டோரேஜ் வசதிகள் உள்ளன.
  • இதில், 5 இன்ச் கொண்ட டிஎஃப்டி ஸ்கிரீன் வெர்ஷன் உள்ளது. 4 வே நேவிகேஷன் ஸ்விட்ச் வழங்கப்பட்டுள்ளது. எமர்ஜென்ஸி ஸ்டாப் சிக்னல் இ-சிம், கஸ்டம் விட்ஜெட் உள்ளிட்ட அம்சங்கள் இதில் உள்ளன. பூட் லேம்ப் ரியர், 3டி லோகா, வென்ட், டிவிஎஸ் ஸ்மார்ட் எக்ஸ்கனெக்ட், ஸ்போர்ட்டி ஸ்டப்பி ஆகிய அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.