IND Vs ENG 3rd T20i: இந்தியா - இங்கிலாந்து டி20 3 வது ஆட்டம்.. இந்திய அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து.. அசத்தல் பேட்டிங்.!

2 போட்டிகளில் தோல்வியை கண்ட இங்கிலாந்து, குஜராத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்து ஆட்டத்தின் சுவாரசியத்தை அதிகரித்துள்ளது. கிரிக்கெட் அப்டேட்களை (Cricket News Tamil) தொடர்ந்து லேட்டஸ்டலி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் படிக்கவும்.

IND Vs ENG 3rd T20i: இந்தியா - இங்கிலாந்து டி20 3 வது ஆட்டம்.. இந்திய அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து.. அசத்தல் பேட்டிங்.!
IND Vs ENG 3rd T20I 2025 (Photo Credit: @BCCI X)

ஜனவரி 26, ராஜ்கோட் (Sports News): இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி (Team England), 5 டி20 போட்டிகள் (India Vs England T20i Series 2025) மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் (IND Vs ENG ODI Series 2025) இந்திய கிரிக்கெட் அணியை எதிர்கொண்டு களம்காண்கிறது. இந்த தொடரில் டி20 ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டி20 (India Vs ENG T20 1st Match 2025) ஆட்டத்திலும், சென்னையில் நடைபெற்ற இரண்டாவது டி20 ஆட்டத்திலும் (IND Vs ENG T20i 2nd Match 2025), இந்திய கிரிக்கெட் அணி அசத்தல் வெற்றி அடைந்தது. அதனைத்தொடர்ந்து, மூன்றாவது போட்டி, 28 ஜனவரி 2025 இன்று, குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. IND Vs ENG 3rd T20I: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20; இந்தியா பவுலிங் தேர்வு.. அணியில் இணைந்த நட்சத்திர வீரர்..! 

முகமது ஷமி களமிறங்கினார்:

இந்த போட்டிகளை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports), ஓடிடியில் ஹாட் ஸ்டார் (Disney Hotstar)ல் நேரலையில் பாக்கலாம். இன்று டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்ததைத் தொடர்ந்து, இங்கிலாந்து கிரிக்கெட் அணி பேட்டிங் செய்தது. இரண்டு டெஸ்ட் தொடர்களில் இங்கிலாந்து அணி தோல்வியை அடைந்திருந்த நிலையில், மூன்றாம் ஆட்டம் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் இன்று அமைந்துள்ளது. இந்திய அணியில் அர்ஸ்தீப் சிங் பதிலாக முகமது சமி (Mohammed Shami) இணைந்து இருந்தார்.

இந்திய அணிக்கு இமாலய இலக்கு:

இங்கிலாந்து அணியின் சார்பில் விளையாடிய பென் டக்கட் 28 பந்துகளில் 51 ரன்னும், ஜோஸ் பட்லர் 22 பந்துகளில் 24 ரன்னும், லிவிங் ஸ்டோன் 24 பந்துகளில் 43 ரன்னும் அதிகபட்சமாக அடித்திருந்தனர். ஆட்டத்தின் முடிவு 20 ஓவர்களில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கி இருக்கிறது. இந்திய அணி இந்த தொடரை கைப்பற்றுமா? அல்லது இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற ஆவலில் இந்த போட்டியில் தோல்வியுற்று எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளை வெற்றி பெற முயற்சிகள் எடுக்குமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

வருண் சக்கரவர்த்தியின் அசத்தல் பந்துவீச்சால், அடுத்தடுத்து சரிந்த விக்கெட்:

(The above story first appeared on LatestLY on Jan 28, 2025 08:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).