ENG Vs IND 1st Test, Day 1: கேப்டன் கில், ஜெய்ஸ்வால் அபார சதம்.. இந்தியா 359 ரன்கள் குவிப்பு..!

இங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 85 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 359 ரன்கள் அடித்துள்ளது.

ENG Vs IND 1st Test, Day 1 (Photo Credit: @cricbuzz X)

ஜூன் 20, லீட்ஸ் (Sports News): இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இங்கிலாந்து - இந்தியா (ENG Vs IND 1st Test) அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி, இன்று (ஜூன் 20) லீட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இத்தொடருக்கு, ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி (Anderson-Tendulkar Trophy) என பெயரிடப்பட்டுள்ளது. சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இங்கிலாந்து - இந்தியா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) நேரடி ஒளிபரப்பு செய்கிறது. அனைத்து போட்டிகளும், இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. Shubman Gill Half Century: கேப்டன் கில் அரைசதம் அடித்து அசத்தல்.. இந்தியா நிலையான ஆட்டம்..!

இங்கிலாந்து எதிர் இந்தியா (England Vs India):

இவ்விரு அணிகளும் இதுவரை 136 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, இந்தியா 35 முறையும், இங்கிலாந்து 51 முறையும் வெற்றி பெற்றுள்ளது. 50 போட்டிகள் சமனில் முடிந்துள்ளன. இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் - கேஎல் ராகுல் இணை தொடக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்த நிலையில், கேஎல் ராகுல் 42 ரன்களுக்கு அவுட்டானார். அடுத்து வந்த சாய் சுதர்சன், அறிமுக போட்டியில் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 25.4 ஓவர்களில் விளையாடி 2 விக்கெட்களை இழந்து 92 ரன்கள் அடித்தது.

இந்தியா அபாரமான பேட்டிங்:

இதனையடுத்து, ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் கில் இணைந்து சிறப்பாக விளையாடினர். ஜெய்ஸ்வால் சதமடித்து (159 பந்துகள் 101 ரன்கள்) அவுட்டானார். அடுத்து, கில் உடன் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். கேப்டன் கில் சதமடித்து (175 பந்துகள் 127* ரன்கள்) அசத்தினார். மறுபுறம் ரிஷப் பந்த் அரைசதம் (102 பந்துகள் 65* ரன்கள்) கடந்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 85 ஓவர்கள் விளையாடி 3 விக்கெட்களை இழந்து 359 ரன்கள் அடித்தது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement