ஜூன் 20, லீட்ஸ் (Sports News): இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இங்கிலாந்து - இந்தியா (ENG Vs IND 1st Test) அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி, இன்று (ஜூன் 20) லீட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இத்தொடருக்கு, ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி (Anderson-Tendulkar Trophy) என பெயரிடப்பட்டுள்ளது. இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் - கேஎல் ராகுல் இணை தொடக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்த நிலையில், கேஎல் ராகுல் 42 ரன்களுக்கு அவுட்டானார். அடுத்து வந்த சாய் சுதர்சன், அறிமுக போட்டியில் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். தொடர்ந்து, கேப்டன் சுப்மன் கில் (Shubman Gill) அதிரடியாக விளையாடி 56 பந்தில் 50* ரன்களை கடந்து தொடர்ந்து விளையாடி வருகிறார். 42.2 ஓவரில் தனது அரைசதத்தை கடந்தார். இந்தியா வலுவான நிலையில் விளையாடி வருகிறது. ENG Vs IND 1st Test, Day 1: இந்தியா 92 ரன்னுக்கு 2 விக்கெட் இழப்பு.. அறிமுக போட்டியில் சாய் சுதர்சன் டக் அவுட்..!

கேப்டன் சுப்மன் கில் அரைசதம் விளாசல்:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)