ENG Vs IND 1st Test, Day 1: இந்தியா 92 ரன்னுக்கு 2 விக்கெட் இழப்பு.. அறிமுக போட்டியில் சாய் சுதர்சன் டக் அவுட்..!
இங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியில், முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 2 விக்கெட்டை இழந்து 92 ரன்கள் அடித்துள்ளது.
ஜூன் 20, லீட்ஸ் (Sports News): இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இங்கிலாந்து - இந்தியா (ENG Vs IND 1st Test) அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி, இன்று (ஜூன் 20) தொடங்கியது. இப்போட்டி, லீட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இத்தொடருக்கு, ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி (Anderson-Tendulkar Trophy) என பெயரிடப்பட்டுள்ளது. சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இங்கிலாந்து - இந்தியா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) நேரடி ஒளிபரப்பு செய்கிறது. அனைத்து போட்டிகளும், இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. ENG Vs IND 1st Test, Toss: இங்கிலாந்து டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. இந்திய இளம்படை சாதிக்குமா..?
இங்கிலாந்து எதிர் இந்தியா (England Vs India):
இவ்விரு அணிகளும் இதுவரை 136 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, இந்தியா 35 முறையும், இங்கிலாந்து 51 முறையும் வெற்றி பெற்றுள்ளது. 50 போட்டிகள் சமனில் முடிந்துள்ளன. இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் - கேஎல் ராகுல் இணை தொடக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்த நிலையில், கேஎல் ராகுல் 42 ரன்களுக்கு அவுட்டானார். அடுத்து வந்த சாய் சுதர்சன், அறிமுக போட்டியில் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 25.4 ஓவர்களில் விளையாடி 2 விக்கெட்களை இழந்து 92 ரன்கள் அடித்துள்ளது.