ENG Vs IND 1st Test, Toss: இங்கிலாந்து டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. இந்திய இளம்படை சாதிக்குமா..?

இங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

ENG Vs IND 1st Test, Toss: இங்கிலாந்து டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. இந்திய இளம்படை சாதிக்குமா..?
ENG Vs IND 1st Test, Toss Update (Photo Credit: @Cricketracker X)

ஜூன் 20, லீட்ஸ் (Sports News): இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இங்கிலாந்து - இந்தியா (ENG Vs IND 1st Test) அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி, இன்று (ஜூன் 20) தொடங்கியது. இப்போட்டி, லீட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இத்தொடருக்கு, ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி என பெயரிடப்பட்டுள்ளது. சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இங்கிலாந்து - இந்தியா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) நேரடி ஒளிபரப்பு செய்கிறது. அனைத்து போட்டிகளும், இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. SS Vs CSG: சேப்பாக் அபார வெற்றி.. முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி..!

இங்கிலாந்து எதிர் இந்தியா (England Vs India):

சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா மட்டுமே அனுபவம் வாய்ந்த வீரராக உள்ளார். மறுபுறம், பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி வலுவான அணியாகவே திகழ்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 136 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, இந்தியா 35 முறையும், இங்கிலாந்து 51 முறையும் வெற்றி பெற்றுள்ளது. 50 போட்டிகள் சமனில் முடிந்துள்ளன. இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

இங்கிலாந்து (பிளேயிங் லெவன்):

ஜாக் க்ராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங்கு, சோயிப் பஷீர்.

இந்தியா (பிளேயிங் லெவன்):

யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த், கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா

(The above story first appeared on LatestLY on Jun 20, 2025 03:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).