SS Vs CSG 2nd Batting (Photo Credit: @TNPremierLeague X)

ஜூன் 19, சேலம் (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2025) கிரிக்கெட் தொடரின், 9வது சீசன் கடந்த ஜூன் 05ஆம் தேதி தொடங்கி ஜூலை 06ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு (TNPL Live Watching) செய்யப்படுகிறது. மேலும், ஃபேன்கோடு (Fancode) என்ற இணையதளத்திலும், மொபைல் செயலியிலும் பார்க்கலாம். இத்தொடரின், முதல் சுற்று லீக் ஆட்டங்கள் கோவையில் நடைபெற்று முடிந்தன. தொடர்ந்து, 2வது சுற்று லீக் ஆட்டங்கள் ஜூன் 13ஆம் தேதி முதல், ஜூன் 19ஆம் தேதி வரை வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில், இன்று (ஜூன் 19) சேலம் ஸ்பார்டன்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (SS Vs CSG, Match 17) அணிகள் மோதின. SS Vs CSG: சேப்பாக் அபார பந்துவீச்சு.. வெற்றி பெற 161 ரன்கள் இலக்கு..!

சேலம் ஸ்பார்டன்ஸ் எதிர் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (Salem Spartans vs Chepauk Super Gillies):

இத்தொடரில், சேலம் அணி 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி பெற்றுள்ளது. சேப்பாக் அணி 4 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இப்போட்டியில், டாஸ் வென்ற சேப்பாக் அணியின் கேப்டன் பாபா அபராஜித் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய சேலம் அணிக்கு ஹரி நிசாந்த் 31 ரன்கள் அடித்து அவுட்டானார். அடுத்து வந்த நிதிஷ் ராஜகோபால் 7, கவின் 1, ராஜேந்திர விவேக் 3 ரன்கள் ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர். நிதானமாக விளையாடி வந்த கேப்டன் அபிஷேக் 47 ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இறுதியில், சன்னி சந்து (18 பந்துகள் 30 ரன்கள்) மற்றும் முகமது (11 பந்துகள் 28* ரன்கள்) அதிரடியாக விளையாட, சேலம் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 160 ரன்கள் அடித்துள்ளது. சேப்பாக் அணி தரப்பில் அதிகபட்சமாக பிரேம் குமார் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

சேப்பாக் அபார வெற்றி:

இதனையடுத்து, சேப்பாக் அணி 161 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்கை துரத்தியது. அதன்படி, சேப்பாக் அணிக்கு கே ஆஷிக் 56 ரன்கள், ஹரிஹரன் 32 ரன்கள் என தொடக்க வீரர்கள் சிறப்பான அடித்தளம் அமைத்தனர். இறுதியில், ஜகதீசன் அதிரடியாக விளையாடி 50 ரன்களில் அவுட்டானார். சேப்பாக் அணி 16.3 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 162 ரன்கள் அடித்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.