ENG Vs SA 2nd ODI, Toss: இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா 2வது ஒருநாள் போட்டி.. இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு..!
இங்கிலாந்து எதிர் தென்னாப்பிரிக்கா (ENG Vs SA ODI) அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
செப்டம்பர் 04, லண்டன் (Sports News): இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா (ENG Vs SA) அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி, இன்று (செப்டம்பர் 04) லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டி, இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகிறது. Amit Mishra Retirement: கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா ஓய்வு.. அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு..!
இங்கிலாந்து எதிர் தென்னாப்பிரிக்கா (England Vs South Africa):
ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி, டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 72 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், இங்கிலாந்து அணி 30 போட்டிகளிலும், தென்னாப்பிரிக்க அணி 36 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 5 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. 1 போட்டிக்கு முடிவில்லை. இரு அணிகளுக்கிடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடரை பேன்கோட் செயலி மூலம் நேரலையில் பார்க்கலாம். இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
இங்கிலாந்து அணி வீரர்கள்:
ஜேமி ஸ்மித், பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி புரூக் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ஜேக்கப் பெத்தேல், வில் ஜாக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், சாகிப் மஹ்மூத்.
தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள்:
ஐடன் மார்க்ரம், ரியான் ரிகெல்டன், டெம்பா பவுமா (கேப்டன்), மேத்யூ ப்ரீட்ஸ்கே, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெவால்ட் பிரெவிஸ், கார்பின் போஷ், செனுரன் முத்துசாமி, கேஷவ் மகாராஜ், நந்த்ரே பர்கர், லுங்கி நிகிடி.
(The above story first appeared on LatestLY on Sep 04, 2025 05:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

