Amit Mishra (Photo Credit: @cricbuzz X)

செப்டம்பர் 04, மும்பை (Sports News): இந்திய கிரிக்கெட் அணியின் லெக்ஸ்பின்னர் அமித் மிஸ்ரா (Amit Mishra) அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 42 வயதான அமித் மிஸ்ரா, கடந்த 2017ஆம் ஆண்டு தனது கடைசி சர்வதேச போட்டியில் விளையாடினார். இருப்பினும், உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தார். சமீபத்தில், ஐபிஎல் 2024 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடினார். BAN Vs NED 3rd T20I: மழையால் ஆட்டம் பாதியில் ரத்து.. நெதர்லாந்திற்கு எதிரான டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது வங்கதேசம்..!

அமித் மிஸ்ரா ஓய்வு:

இந்தியாவுக்காக 22 டெஸ்ட், 36 ஒருநாள் மற்றும் 10 டி20ஐ போட்டிகளில் விளையாடி, மொத்தம் 156 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2008ஆம் ஆண்டு மொஹாலியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அறிமுக போட்டியிலேயே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஐபிஎல் தொடரில், அமித் மிஸ்ரா 162 போட்டிகளில் 174 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெல்லி டேர்டெவில்ஸ் (2008), டெக்கான் சார்ஜர்ஸ் (2011) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (2013) ஆகிய அணிகளுடன் இணைந்து மூன்று முறை ஹாட்ரிக் சாதனை படைத்த ஒரே பந்துவீச்சாளர் என்ற தனித்துவமான சாதனை படைத்துள்ளார்.

அமித் மிஸ்ரா வெளியிட்ட பதிவு: