ENG Vs SA 2nd T20I, Toss: தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து..?
இங்கிலாந்து எதிர் தென்னாப்பிரிக்கா (ENG Vs SA T20I) அணிகள் மோதும் 2வது டி20ஐ போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
செப்டம்பர் 12, மான்செஸ்டர் (Sports News): தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த ஒருநாள் தொடரை தென்னாப்பிரிக்கா அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து, முதலாவது டி20 போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி டிஎல்எஸ் விதிப்படி 14 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது. இந்நிலையில், இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா (ENG Vs SA) அணிகள் மோதும் 2வது டி20ஐ போட்டி, இன்று (செப்டம்பர் 12) மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெறுகிறது. PAK Vs OMA: பாகிஸ்தான் 160 ரன்கள் குவிப்பு.. வெற்றி பெறுமா ஓமன் அணி..?
இங்கிலாந்து எதிர் தென்னாப்பிரிக்கா (England Vs South Africa):
ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி, ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 26 சர்வதேச டி20 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், இங்கிலாந்து அணி 12 போட்டிகளிலும், தென்னாப்பிரிக்க அணி 13 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டிக்கு முடிவில்லை. இப்போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
இங்கிலாந்து அணி வீரர்கள்:
பிலிப் சால்ட், ஜோஸ் பட்லர், ஜேக்கப் பெத்தெல், ஹாரி புரூக் (கேப்டன்), டாம் பான்டன், வில் ஜாக்ஸ், சாம் கரன், லியாம் டாசன், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், லூக் வுட்.
தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள்:
ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ரியான் ரிக்கல்டன், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், டெவால்ட் ப்ரீவிஸ், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், டோனோவன் ஃபெரீரா, மார்கோ ஜான்சன், காகிசோ ரபாடா, பிஜோர்ன் ஃபோர்டுயின், க்வேனா மபாகா, லிசாட் வில்லியம்ஸ்.
(The above story first appeared on LatestLY on Sep 12, 2025 10:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

