PAK Vs OMA 1st Batting (Photo Credit: @mrcricketuae X)

செப்டம்பர் 12, துபாய் (Sports News): ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) டி20 கிரிக்கெட் தொடர், செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 28ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இத்தொடரில், மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. குரூப் 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ, ஓமன் அணிகளும், குரூப் 'பி' பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இத்தொடர், சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் சோனி லிவ் ஓடிடி தளத்தில் நேரலை ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது. PAK Vs OMA, Toss: பாகிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.. சமாளிக்குமா ஓமன் அணி..?

பாகிஸ்தான் எதிர் ஓமன் (Pakistan Vs Oman):

இந்நிலையில், குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் - ஓமன் (PAK Vs OMA) அணிகள் மோதும் 4வது லீக் போட்டி, இன்று (செப்டம்பர் 12) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆகா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 160 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக முகமது ஹாரிஸ் 66 ரன்கள், ஃபர்ஹான் 29 ரன்கள் அடித்தனர். ஓமன் அணி சார்பில் ஷா பைசல் மற்றும் அமீர் கலீம் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

பாகிஸ்தான் அணி வீரர்கள்:

சைம் அயூப், சாஹிப்ஸாதா ஃபர்ஹான், முகமது ஹாரிஸ், ஃபகார் ஜமான், சல்மான் அலி ஆகா (கேப்டன்), ஹசன் நவாஸ், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஷஹீன் அப்ரிடி, சுஃப்யான் மொகிம், அப்ரார் அகமது.

ஓமன் அணி வீரர்கள்:

ஜதீந்தர் சிங் (கேப்டன்), அமீர் கலீம், ஹம்மாத் மிர்சா, விநாயக் சுக்லா, பைசல் ஷா, ஹஸ்னைன் அலி ஷா, முகமது நதீம், ஜிக்ரியா இஸ்லாம், சுஃப்யான் மெஹ்மூத், ஷகீல் அகமது, சமய் ஸ்ரீவஸ்தவா.