ENG Vs SA 1st ODI: இங்கிலாந்திற்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டி.. தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

இங்கிலாந்து எதிர் தென்னாப்பிரிக்கா (ENG Vs SA ODI) அணிகள் மோதிய முதலாவது ஒருநாள் போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ENG Vs SA 1st ODI: இங்கிலாந்திற்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டி.. தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!
ENG Vs SA 1st ODI SA Won (Photo Credit: @cricbuzz X)

செப்டம்பர் 02, லீட்ஸ் (Sports News): இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா (ENG Vs SA) அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி, இன்று (செப்டம்பர் 02) லீட்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டி, இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகியது. இரு அணிகளுக்கிடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடரை பேன்கோட் செயலி மூலம் நேரலையில் பார்க்கலாம். PAK Vs AFG, Toss: முத்தரப்பு டி20 தொடர்; பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு..!

இங்கிலாந்து எதிர் தென்னாப்பிரிக்கா (England Vs South Africa):

இப்போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, தென்னாப்பிரிக்கா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 24.3 ஓவர்களில் 131 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ஜேமி ஸ்மித் 54 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். தென்னாப்பிரிக்கா சார்பில் கேஷவ் மகாராஜ் 4, வியான் முல்டர் 3, நந்த்ரே பர்கர் மற்றும் லுங்கி நிகிடி தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

தென்னாப்பிரிக்கா அபார வெற்றி:

இதனையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணிக்கு தொடக்க வீரர்கள் ஐடன் மார்க்ரம் - ரியான் ரிகெல்டன் இணை சிறப்பாக விளையாடினர். முதல் விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்த நிலையில், ஐடன் மார்க்ரம் 86 ரன்னில் அவுட்டாகினார். ரியான் ரிகெல்டன் 31* ரன்கள் அடித்த நிலையில், தென்னாப்பிரிக்கா அணி 20.5 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 137 ரன்கள் அடித்தது. இதன்மூலம், 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணி வீரர்கள்:

ஜேமி ஸ்மித், பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி புரூக் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ஜேக்கப் பெத்தேல், வில் ஜாக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், சோனி பேக்கர்.

தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள்:

ஐடன் மார்க்ரம், ரியான் ரிகெல்டன், டெம்பா பவுமா (கேப்டன்), டோனி டி சோர்ஸி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெவால்ட் பிரெவிஸ், வியான் முல்டர், கார்பின் போஷ், கேஷவ் மகாராஜ், நந்த்ரே பர்கர், லுங்கி நிகிடி.

(The above story first appeared on LatestLY on Sep 02, 2025 09:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).