PAK Vs AFG, Toss: முத்தரப்பு டி20 தொடர்; பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு..!

முத்தரப்பு டி20 தொடரில் பாகிஸ்தான் எதிர் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 4வது போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

PAK Vs AFG, Toss: முத்தரப்பு டி20 தொடர்; பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு..!
PAK Vs AFG, Toss (Photo Credit: @Faheem01932588 X)

செப்டம்பர் 02, ஷார்ஜா (Sports News): ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் யுஏஇ அணிக்கு எதிராக முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த முத்தரப்பு டி20 தொடர் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் தொடங்கி செப்டம்பர் 07ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 போட்டிகளில் மோத வேண்டும். புள்ளிப்பட்டியலில், முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் (செப்டம்பர் 07) மோதும். அனைத்து போட்டிகளும், ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில், இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு ஆரம்பமாகும். ENG Vs SA 1st ODI: இங்கிலாந்து 131 ரன்களுக்கு ஆல் அவுட்.. தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு..!

பாகிஸ்தான் எதிர் ஆப்கானிஸ்தான் (Pakistan Vs Afghanistan):

இந்நிலையில், இன்று (செப்டம்பர் 02) நடைபெறும் 4வது ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் (PAK Vs AFG) அணிகள் மோதுகின்றன. சல்மான் ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி, ரஷீத் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 8 சர்வதேச டி20 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகளிலும், பாகிஸ்தான் அணி 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இப்போட்டியில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷீத் கான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

பாகிஸ்தான் அணி வீரர்கள்:

சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், ஃபகார் ஜமான், சல்மான் ஆகா (கேப்டன்), ஹசன் நவாஸ், முகமது நவாஸ், முகமது ஹாரிஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஷஹீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், சுபியான் முகீம்.

ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள்:

ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், தர்வீஷ் ரசூலி, செடிகுல்லா அடல், அஸ்மதுல்லா உமர்சாய், கரீம் ஜனத், முகமது நபி, ரஷித் கான் (கேப்டன்), அல்லா கசன்ஃபர், நூர் அகமது, ஃபசல்ஹாக் ஃபரூக்கி.

(The above story first appeared on LatestLY on Sep 02, 2025 08:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).