INDW Vs ENGW Toss: இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.. இந்தியா Vs இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட்.!

இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணி Vs இங்கிலாந்து மகளிர் தேசிய கிரிக்கெட் அணி (India Women's National Cricket Team Vs England Women's National Cricket Team) ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்றுள்ளது.

INDW Vs ENGW Toss: இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.. இந்தியா Vs இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட்.!

அக்டோபர் 19, இந்தூர் (Sports News): ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் (ICC Women's Cricket World Cup) போட்டி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 16ஆம் தேதியான இன்று வரை 19 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்து தேசிய பெண்கள் கிரிக்கெட் அணி 7 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. முதல் இடத்தில ஆஸ்திரேலியாவும், இரண்டாவது இடத்தில் தென்னாப்பிரிக்காவும் இருக்கின்றன. இந்திய கிரிக்கெட் அணியை பொறுத்தவரையில் முதல் இரண்டு போட்டியில் வெற்றி, அடுத்த இரண்டு போட்டிகள் தோல்வி என தான் சந்தித்த 4 போட்டிகளில் இரண்டில் வெற்றி, இரண்டில் தோல்வி என 4 புள்ளிகளை பெற்று 4வது இடத்தில் இருக்கிறது. அரை இறுதி, கால் இறுதிக்கு செல்ல இந்திய அணி இனி தொடர் வெற்றியை பதிவு செய்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது. INDW Vs ENGW: இந்தியா Vs இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெறப்போவது யார்?.. ஐசிசி மகளிர் உலகக்கோப்பை 2025.!

இந்தியா பெண்கள் Vs இங்கிலாந்து பெண்கள் (India Women Vs England Women):

அக்டோபர் 19ஆம் தேதியான இன்று இந்தியா பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி Vs இங்கிலாந்து பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி (India Women National Cricket Team Vs England Women National Cricket Team) மோதிக் கொள்கின்றன. இந்திய நேரப்படி மதியம் 3 மணி அளவில் தொடங்கி நடைபெறும் இந்த ஆட்டம், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த போட்டியை ஜியோ ஹாட்ஸ்டார் செயலி மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிகளில் நேரலையில் பார்க்கலாம். தொடர் வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இருக்கும் இங்கிலாந்து அணியும், நான்காவது இடத்தில் இருக்கும் இந்திய அணியும் நேருக்கு நேர் மோதிக்கொள்ள போகும் ஆட்டம் அதிகளவில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் போட்டியின் முதல் கட்டமாக டாஸ் நடைபெற்ற நிலையில், டாஸில் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இந்தியா பெண்கள் Vs இங்கிலாந்து பெண்கள் அணி விபரம் (India Women Vs England Women Squad):

இந்தியா பெண்கள் (India Women Squad):

ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ஹர்மன்ப்ரீத் கவுர் (C), தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ் (WK), அமன்ஜோத் கவுர், ஸ்னே ராணா, கிராந்தி கவுட், ஸ்ரீ சரணி, ரேணுகா சிங் தாக்கூர்

இங்கிலாந்து பெண்கள் (England Women Squad):

டாமி பியூமண்ட், ஆமி ஜோன்ஸ் (WK), ஹீதர் நைட், நாட் ஸ்கைவர்-பிரண்ட் (C), சோபியா டன்க்லி, எம்மா லாம்ப், ஆலிஸ் கேப்சி, சார்லி டீன், சோஃபி எக்லெஸ்டோன், லின்சி ஸ்மித், லாரன் பெல்

(The above story first appeared on LatestLY on Oct 19, 2025 02:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).