India Women Cricket Team (Photo Credit : @BCCI X)

அக்டோபர் 18, இந்தூர் (Sports News): ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் (ICC Women's Cricket World Cup) போட்டி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 16ஆம் தேதியான இன்று வரை 19 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்து தேசிய பெண்கள் கிரிக்கெட் அணி 7 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. முதல் இடத்தில ஆஸ்திரேலியாவும், இரண்டாவது இடத்தில் தென்னாப்பிரிக்காவும் இருக்கின்றன. இந்திய கிரிக்கெட் அணியை பொறுத்தவரையில் முதல் இரண்டு போட்டியில் வெற்றி, அடுத்த இரண்டு போட்டிகள் தோல்வி என தான் சந்தித்த 4 போட்டிகளில் இரண்டில் வெற்றி, இரண்டில் தோல்வி என 4 புள்ளிகளை பெற்று 4வது இடத்தில் இருக்கிறது. அரை இறுதி, கால் இறுதிக்கு செல்ல இந்திய அணி இனி தொடர் வெற்றியை பதிவு செய்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது. IND Vs WI India Victory: அசத்திய கே.எல். ராகுல்.. இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போட்டியில் இந்தியா மாஸ் வெற்றி.! 

இந்தியா பெண்கள் Vs இங்கிலாந்து பெண்கள் (India Women Vs England Women):

அக்டோபர் 19ஆம் தேதி இந்தியா பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி Vs இங்கிலாந்து பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி (India Women National Cricket Team Vs England Women National Cricket Team) மோதிக் கொள்கின்றன. இந்திய நேரப்படி மதியம் 3 மணி அளவில் தொடங்கி நடைபெறும் இந்த ஆட்டம், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த போட்டியை ஜியோ ஹாட்ஸ்டார் செயலி மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிகளில் நேரலையில் பார்க்கலாம். தொடர் வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இருக்கும் இங்கிலாந்து அணியும், நான்காவது இடத்தில் இருக்கும் இந்திய அணியும் நேருக்கு நேர் மோதிக்கொள்ள போகும் ஆட்டம் அதிகளவில் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா எதிர் இங்கிலாந்து கிரிக்கெட் (India Vs England Women's Cricket Winning Prediction):

பேட்டிங் மற்றும் பவுலர்களுக்கு ஏற்ற மைதானமாக இருக்கும் கோல்கரில், ரன்கள் குவிக்கவும் விக்கெட்டுகளை அதிகம் எடுக்கவும் நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும். அன்றைய நாளில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்பதால், ஆட்டம் தடைபடவும் வாய்ப்பு இல்லை. இரண்டு அணிகளும் சமமான திறனை வெளிப்படுத்தி போட்டியில் வெற்றிக்கு போராடும் என்பதால் ஆட்டம் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தியா எதிர் இங்கிலாந்து போட்டியில் வெற்றி பெறப்போவது யார்? என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெருவாரியாக ஏற்பட்டுள்ளது. இந்த போட்டியில் இந்தியாவிற்கான வெற்றி வாய்ப்பாக 57%, இங்கிலாந்துக்கான வெற்றி வாய்ப்பாக 43% கணிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் சமன் வாய்ப்பு இல்லாததால் டிராவில் முடிவது அரிது. இதனால் இந்திய பெண்கள் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா Vs இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் (INDW Vs ENGW Cricket):

போட்டி நாள்: 19 அக்டோபர் 2025

போட்டி அணிகள்: இந்தியா பெண்கள் - இங்கிலாந்து பெண்கள் (India Women - England Women)

போட்டி நேரம்: மதியம் 03:00 மணி (இந்திய நேரப்படி)

டாஸ் நேரம்: மதியம் 02:30 மணி (இந்திய நேரப்படி)

போட்டி இடம்: கோல்கர் மைதானம், இந்தூர், மத்திய பிரதேசம்