மே 30, ஒஸ்லோ (Sports News):மே கடந்த 2013ம் ஆண்டு முதல் நார்வே நாட்டில் சர்வதேச அளவிலான செஸ் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே - ஜூன் மாதங்களில் நடைபெறும் இந்த செஸ் போட்டியில், உலகளாவிய தலைசிறந்த செஸ் சாம்பியன்கள் கலந்துகொள்வார்கள். அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான நார்வே செஸ் டோர்னமெண்ட் (Norway Chess Tournament 2024) போட்டிகள் மே 7ல் தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. Anti-drug Awareness for Students: "போதை பொருட்களே ஒழித்தாலே குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது.." போதை பொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி..!
சொந்த நாட்டில் மண்ணை கவ்விய கார்ல்சன்: அந்த போட்டியில், இந்தியா சார்பில் தலைசிறந்த செஸ் வீரரான பிரக்யானந்தா கலந்துகொண்டார். இவர் சர்வதேச அளவில் செஸ் விளையாட்டில் சிறந்து விளங்கும் போட்டியாளர் மாங்னஸ்கார்ல்சன்னை தகுதிச்சுற்றில் தோல்வியுற செய்து வெற்றியை தனதாக்கினார். 18 வயதாகும் ப்ரக்யானந்தா, சர்வதேச அளவில் முதல் இடத்தில் இருக்கும் செஸ் வீரரை, அவரின் சொந்த நாட்டிலேயே தோல்வியுற செய்தது உலகளவில் கவனத்தை பெற்றுள்ளது. Shah Rukh Khan Appointed As New Brand Ambassador: முத்தூட் பாப்பச்சன் குழுமத்தின் புதிய பிராண்ட் தூதர்.. பாலிவுட் சூப்பர்ஸ்டார்ட் ஷாருக்கான் நியமனம்..!
அடுத்தடுத்த போட்டிகளுக்கு தயாராகும் ப்ரக்யானந்தா: 9 க்கு 5.5 புள்ளிகள் வீதம் வெற்றியடைந்த ப்ரக்யானந்தா, அடுத்தடுத்த போட்டிகளில் விளையாட இருக்கிறார். இந்த போட்டியை பொறுத்தமட்டில் தொடக்கத்திலேயே தடுமாறிய கார்ல்சன், அடுத்தடுத்து காய்களை நகர்த்துவதில் தவறை இழைத்து தோல்வி அடைந்தார். இதனால் அவர் நார்வே செஸ் போட்டியின் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு சென்றார். இந்த தோல்வி அவரின் வாழ்நாளில் மறக்க இயலாததாக இருக்கும் என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
ப்ரக்யானந்தா வெற்றி பெற்றதன் வீடியோ:
First classical win for Praggnanandhaa against Magnus Carlsen. What more to say?
This victory marks a significant milestone in Praggnanandhaa's career. Congratulations! 🌟#NorwayChess pic.twitter.com/ZrCHVexis8
— Norway Chess (@NorwayChess) May 29, 2024